அமைச்சர் சண்முகம்: போலிசார், அமலாக்கப் படையினர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறும் போக்கு அதிகரித்துள்ளது

போலி­சார், அம­லாக்க அமைப்­பு­களைத் தவ­றா­கப் சித்­தி­ரிக்­கும் முயற்­சி­கள் அதி­க­ரித்து வரு­வ­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் கூறி­யுள்­ளார்.

மாது ஒரு­வர் சென்ற மாதம் நொவீனா ஸ்கு­வேர் பேரங்­கா­டி­யில் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வம், காணொ­ளி­யா­கப் பதிவு செய்­யப்­பட்டு இணை­யத்­தில் பகி­ரப்­பட்­டது. போலி­சார் தங்­க­ளின் அதி­கா­ரத்­தைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்தி அந்த மாதைக் கார­ண­மில்­லா­மல் கைது செய்­துள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது.

இத்­த­கைய பொய்த் தக­வல்­கள், போலி­சார் தங்­கள் அதி­கா­ரத்­தைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­து­வது போல் சித்­தி­ரிக்­கப்­ப­டு­வ­தாக உள்­ள­தென்று திரு சண்­மு­கம் குறிப்­பிட்­டார். இணை­யத்­தில் இடம்­பெற்ற அமைச்­சர்­க­ளின் விருது வழங்­கும் விழா­வில் பேசிய அவர், அம­லாக்க அமைப்­பு­களை இவ்­வாறு தவ­றா­கச் சித்­தி­ரிக்­கும் முயற்­சி­கள் அதி­கரித்து வரு­வ­தா­க­வும் சுட்­டி­னார்.

ஆனால் இத்­த­கைய முயற்­சி­கள், போலி­சா­ருக்­கும் ஏனைய அமைப்­பு­க­ளுக்­கும் மிரட்­டல் விடுக்க முடி­யாது என்­றும் அவர் கூறி­னார்.

“போலி­சார் நட­வ­டிக்கை எடுக்­கும்­போது, அவர்­க­ளின் விசா­ர­ணைக்­குப் பின்­னால் அர­சி­யல் கார­ணம் இருப்­ப­தா­கச் சிலர் கூறு­வர். சட்ட அம­லாக்­கச் செயல்­மு­றை­களைப் பற்றி ஆதா­ர­மற்ற வேறு கருத்­து­க­ளை­யும் சொல்­வர்,” என்று பகிர்ந்­து­கொண்­டார் அமைச்­சர். நம்­பிக்கை மோசடி, பாலி­யல் துன்­புறுத்­தல் எனத் தங்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­கள் கடு­மை­யாக இருந்­தால், ஒரு சிலர் விசா­ர­ணை­யி­லிருந்து தனக்­குத் தனிப்­பட்ட விலக்கு அளிக்­கு­மாறு தெரி­வித்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

“ஆனால் சட்­டம் என்­பது அனை­வ­ருக்­கும் பொது, நீங்­கள் யாராக இருந்­தா­லும்,” என்று வலி­யு­றுத்­தி­னார் திரு சண்­மு­கம்.

பேரங்­கா­டி­யில் கைது செய்­யப்­பட்ட மாது குறித்­தும் அவர் கூடு­தல் விவ­ரம் தெரி­வித்­தார். தற்­போது மன­ந­லக் கழ­கத்­தில் மாது சிகிச்சை பெற்று வரு­வ­தாக அவர் சொன்­னார். ஆட­வர் ஒரு­வ­ரின் தலை மீது உண­வைக் கொட்­டிய பின், அவரை நோக்கி எச்­சில் உமிழ்ந்து, கையை­யும் கடித்­தார் அந்த மாது. மாதை அணு­கிய போலிஸ் அதி­கா­ரி­களை நோக்­கித் தகாத வார்த்­தை­க­ளைச் சொன்­ன­து­டன் அவர்­கள் மீதும் எச்­சில் உமிழ்ந்­தார். மாது அருகே இருந்த அவ­ரின் உற­வி­னர்­க­ளால் அவ­ரைச் சாந்­தப்­படுத்­த­வும் முடி­ய­வில்லை.

“அந்த மாது தனக்­கும் பிற­ருக்­கும் ஆபத்து விளை­விக்­கும் வகை­யில் நடந்­து­கொண்­டார்,” என்­றார் அமைச்­சர் சண்­மு­கம்.

தம் உரை­யில் பயங்­க­ர­வாதம், கொவிட்-19 போராட்­டம் ஆகி­ய­வற்றை போலி­சார் சந்­திக்­கும் வேறு இரண்டு முக்­கிய சவால்­களாக குறிப்­பிட்­டார் அமைச்­சர்.

போலி­சா­ரும் ஏனைய அமைப்­பு­களும் சமூக அள­வில் ஏற்­படும் தொற்­றைக் குறைந்த எண்­ணிக்­கைக்­குக் கொண்டு வர உத­வி­ய­தாக அவர் கூறி­னார். இருப்­பி­னும் தொற்­றின் அலை மீண்­டும் வரும் அபா­யம் உள்­ளது என்­றும் நினை­வு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!