டாக்சி, தனியார் வாடகை வாகன நிறுவனங்கள் தொடர்பில் புதிய கட்டமைப்பு நடப்புக்கு வந்தது

ஓரி­டத்­தி­லி­ருந்து இன்­னொரு இடத்­திற்­குப் பய­ணி­க­ளைக் கொண்டு செல்­லும் டாக்­சி­கள், தனி­யார் வாடகை வாக­னங்­கள் ஆகியன தொடர்­பில் புதிய கட்­ட­மைப்பு நடப்­புக்கு வந்­துள்­ளது. இதன்­படி, தனி­யார் வாடகை வாக­னங்­கள் அடிக்­கடி சோத­னைக்கு அனுப்­பப்­பட வேண்­டும். விபத்­துக்­குள்­ளா­கும் சாத்­தி­யம் இல்­லா­த­வாறு தரக் குறி­யீட்டை அவ்­வா­க­னங்­கள் நிறை­வுச் செய்ய வேண்­டும்.

மேலும், பய­ணச் சேவை வழங்­கும் எந்த நிறு­வ­னத்­து­ட­னும் இனி டாக்சி ஓட்­டு­நர்­கள் ஒப்­பந்­தம் செய்து இணைந்­து­கொள்­ள­லாம் என்­றும் அறி­விக்­கப்­பட்­டது. ஆனால் பய­ணத்­திற்­கான கட்­ட­ணம் முன்­னரே உறு­தி­செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டும். இத்­த­கைய மாற்­றங்­களைக் கொண்டு அமைந்த புதிய கட்­டுப்­பாட்டு கட்­ட­மைப்பு நேற்று முதல் நடப்­புக்கு வந்­தது.

டாக்சி ஓட்­டு­நர்­க­ளுக்­கும் தனி­யார் வாடகை வாகன ஓட்­டு­நர்­களுக்­கும் சம வாய்ப்­பு­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்­பதே இப்­பு­திய கட்­ட­மைப்­பின் இலக்­கா­கும்.

பய­ணி­களை ஓரி­டத்­தி­லி­ருந்து மற்­றோர் இடத்­திற்­குக் கொண்டு செல்­லும் போக்­கு­வ­ரத்­துத் துறைச் சட்­டம், சென்ற ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டது. இதன்­கீழ் இப்­பு­திய கட்­ட­மைப்பு அமைந்­துள்­ளது.

இருப்­பி­னும், இவ்­வாண்டு ஜூன் மாதம் முதல் நடப்­புக்கு வர வேண்­டிய இக்­கட்­ட­மைப்பு, கொவிட்-19 நெருக்­க­டி­யால் நிறுத்தி வைக்­கப்­பட்­டது. பய­ணச் சேவை வழங்­கு­வ­தற்­கான வாடகை நிறு­வ­னங்­களுக்கு இரு வகை உரி­மங்­கள் அளிக்­கப்­ப­டு­கின்­றன.

இவற்­றில் வாடகை வாக­னச் சேவை வழங்­கும் உரி­மம் ஒன்று, பகிர்வு பய­ணச் சேவை வழங்­கும் உரி­மம் மற்­றொன்று என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இரு­வகை உரி­மங்­களும் மூன்று ஆண்­டு­க­ளுக்­குச் செல்­லு­ப­டி­யா­கக் கூடி­யவை என்­றும் கூறப்­பட்­டது.

“புதிய கட்­ட­மைப்பு நடப்­புக்கு வந்த பின் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றம் ஆகி­ய­வற்­றால் டாக்சி மற்­றும் தனி­யார் வாடகை வாக­னப் போக்­கு­வ­ரத்­துப் பிரிவை மேலும் நன்கு கண்­கா­ணிக்க முடி­யும். இத­னால் ஓட்­டு­நர்­கள், பய­ணி­கள் இரு­த­ரப்­பின் பாது­காப்பு மற்­றும் ஆர்­வத்­தை­யும் உறு­தி­செய்ய முடி­யும்,” என்று இரு தரப்­பும் கூறின.

“உரி­மம் வழங்­கப்­பட்­டுள்ள நிலை­யில், நிறு­வ­னங்­கள் அனைத்து நிபந்­த­னை­க­ளை­யும் நிறைவு செய்ய வேண்­டும். ஆணை­யத்­தின் பாது­காப்­புத் தரம் இருப்­ப­தை­யும் உறுதி செய்ய வேண்­டும். ஓட்­டு­நர்­க­ளு­ட­னான பங்­கா­ளித்­துவ ஏற்­பா­டு­கள் எவ்­வித பார­பட்­ச­மும் இல்­லாது அமைய வேண்­டும்,” என்­றும் தெரி­வித்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!