89,000 பேருக்கு கொவிட்-19 ஆதரவு மானியம் கிடைத்துள்ளது

கொவிட்-19 ஆத­ரவு மானி­யத் திட்­டத்­தின் மூலம் இது­வரை சுமார் 89,000 பேர் பல­ன­டைந்­துள்­ள­னர். மேலும், முதல் முறை மானி­யத் திட்­டத்­திற்­குத் தகு­தி­பெற்ற 10,000 பேர் வெற்­றி­க­ர­மாக இரண்­டா­வது முறைக்­கும் விண்­ணப்­பித்­துத் தகு­தி­பெற்­றுள்­ள­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று தம் ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்­தார்.

கொள்­ளை­நோ­யால் வேலை­ இழந்­தோர், சம்­ப­ள­மில்லா விடுப்­பில் உள்­ளோர், குறிப்­பி­டத்­தக்க ஊதிய இழப்­புக்கு ஆளா­னோர் ஆகி­ய­வர்­க­ளுக்கு ஒரு மாதத்­திற்­குத் தலா $800 என மூன்று மாதங்­க­ளுக்கு மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. இதற்­கு சிங்­கப்­பூரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் தகு­தி­பெற்று வரு­கின்­ற­னர்.

பல்­வேறு அர­சாங்க உத­வித் திட்­டங்­க­ளு­டன் இந்த கொவிட்-19 ஆத­ரவு மானி­யத் திட்­ட­மும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும் என்­றார் திரு மச­கோஸ்.

முழு­நேர, பகு­தி­நேர ஊழி­யர்­களுக்­கான இந்த மானி­யத் திட்­டத்­திற்கு விண்­ணப்­பிக்க இறுதி நாள் இவ்­வாண்டு டிசம்­பர் 31ஆம் தேதி. விண்­ணப்­பங்­களை சிங்­பாஸ் இணை­யத்­த­ளத்­தின் மூலம் சமர்ப்­பிக்­க­லாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon