சிங்கப்பூரில் ஏழாவது மாதமாக வங்கிக் கடன் குறைந்தது

சிங்கப்பூரில் ஏழாவது மாதமாக வங்கிக் கடன் குறைந்தது

1 mins read
dbc0721b-e5e4-4f73-8cb8-47032cd3d65f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வர்த்­த­கங்­க­ளுக்கு வழங்­கப்­படும் கடன்­கள் மெது­வ­டைந்­த­தன் பின்­ன­ணி­யில் சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து ஏழா­வது மாத­மாக வங்­கிக் கடன் விகி­தம் சரிந்­துள்­ளது. சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட முன்­னோட்­டத் தகவல்களில் இது தெரிய வந்­துள்­ளது.

உள்­ளூர் வங்­கி­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட கடன்­க­ளின் மொத்த மதிப்பு செப்­டம்­பர் மாதத்­தில் $677.46 பில்­லி­ய­னாக இருந்­தது.

அதற்கு முன் ஆகஸ்ட் மாதத்­தில் இது $677.86 பில்­லி­ய­னாக இருந்­தது.

வர்த்­த­கங்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட கடன் மதிப்பு ஆகஸ்ட் மாதத்­தில் $422.54 பில்­லி­ய­னாக இருந்­தது. அது 0.‌3% குறைந்து செப்­டம்­பர் மாதத்­தில் $421.28 பில்­லி­யன் ஆனது.

வர்த்­த­கக் கடன் பெற்ற நிறு­வ­னங்­க­ளி­டையே கட்­டட, கட்­டு­மா­னப் பிரிவு மட்­டுமே வளர்ச்சி கண்­டி­ருந்­தது. கட்­டு­மா­னத் துறைக்கு வழங்­கப்­பட்ட கடன்­கள் செப்­டம்­பர் மாதத்­தில் 0.7% அதி­க­ரித்து $150.91 பில்­லி­ய­னாக இருந்­தது.

வீட்­டுக் கடன்­கள், பகிர் நிதி ஆகி­ய­வற்­றால் பய­னீட்­டா­ளர் கடன்­களும் செப்­டம்­பர் மாதத்­தில் 0.3% அதி­க­ரித்து $256.18 பில்­லி­யன் ஆனது.

சென்ற ஆண்­டின் செப்­டம்­பர் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் ஒட்டு­மொத்த வங்­கிக் கடன் 1% குறைந்துள்­ளது.

ஓராண்­டுக்கு முன் அளிக்­கப்­பட்ட வர்த்­த­கக் கடன் மதிப்புடன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு செப்­டம்­ப­ரில் 0.2% வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட கடன்­களும் அதே ஓராண்டு காலத்­தில் 2.5% குறைந்துள்ளது.