பிரான்ஸ் தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம்

பிரான்ஸ் தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம்

1 mins read
163b6586-1722-49eb-a721-b97cefbdb828
படம்: ராய்ட்டர்ஸ் -

பிரான்சின் நிஸ் நகரில் உள்ள நோட்ர டாம் தேவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு சிங்கப்பூர் வன்மையாக கண்டனம் தெரிவிப்பதாக வெளியுறவு அமைச்சு இன்று தெரிவித்தது.

"வழிபாட்டுத் தலத்தில் அப்பாவி மக்களின் மரணங்களுக்கும் பலர் காயமடைவதற்கும் அது காரணமாக இருந்தது.

"உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்.

"தாக்குதலில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்," என்று அமைச்சு கூறியது.