'நல்ல எண்ணத்துடன் கருத்துகள் கூறப்பட்டன' 'தி ஆன்லைன் சிட்டிசன்' அவதூறு வழக்கு

1 mins read

'தி ஆன்­லைன் சிட்­டி­சன்' இணை­யத்தளத்­தில் அதன் ஆசி­ரி­யர் டெரி ஸுவும் டி கோஸ்­டா­வும் சிங்­கப்­பூர் அமைச்­ச­ரவை உறுப்­பினர்­கள் மீது அவ­தூறு வாச­கங்­களைப் பரப்­பி­ய­தாக 2018ஆம் ஆண்­டில் இரு­வர் மீது நீதி­மன்­றத்­தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்து.

'தி ஆன்­லைன் சிட்­டி­சன்' இணை­யத்தளத்­திற்­குக் கட்­டுரை எழு­தி­யி­ருந்த டேனி­யல் டி கோஸ்டா நல்ல எண்­ணத்­து­டன் நடந்­து­கொண்­ட­தாக இந்த வழக்­கில் அவ­ருக்­காக வாதி­டும் வழக்­க­றி­ஞ­ரான திரு எம்.ரவி நேற்று முன்­தி­னம் நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.

சட்­டத்­தின்­கீழ், அர­சாங்க ஊழி­யர்­க­ளின் நடத்தை குறித்து நல்ல எண்­ணத்­து­டன் கருத்து கூறு­வோர், அவ­தூறு பரப்­பி­ய­தா­கக் குற்­ற­மா­காது என்று அவ­தூறு வழக்கின் நான்­கா­வது நாள் விசா­ர­ணை­யின்­போது திரு ரவி வாதிட்­டார். வழக்கு விசா­ரணை இந்த மாதத்­திற்கு ஒத்­தி­வைக்­கப்­பட்டு உள்­ளது.

கட்­டுரை எழு­து­வ­தில் தமது கட்­சிக்­கா­ரர் கெட்ட நோக்­கத்­துடன் நடந்­து­கொள்­ள­வில்லை என்று சொன்ன திரு ரவி, பிரதமர் லீ சியன் லூங்­கின் உடன்­பி­றப்­பு­க­ளான திரு லீ சியன் யாங் மற்­றும் டாக்­டர் லீ வெய் லிங் ஆகி­யோர் முன்­வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டு­க­ளைத்­தான் அந்­தக் கட்­டு­ரை­யில் டி கோஸ்டா மறு­ப­டி­யும் கூறி­ய­தா­கச் சொன்­னார். 2017ல் பிர­த­ம­ரின் உடன்­பி­றப்­பு­கள் வெளி­யிட்­டி­ருந்த கூட்­ட­றிக்­கை­யில் அவர்­கள் கூறி­யி­ருந்­தது உண்மை என்று டி கோஸ்டா நம்­பி­ய­தா­க­வும் அவர் சொன்­னார்.

டி கோஸ்டா எழு­திய கட்­டு­ரையை 'தி ஆன்­லைன் சிட்­டி­சன்' இணை­யத் தளத்­தில் ஸு வெளி­யிட்­டி­ருந்­தார். இந்த வழக்கு விசா­ர­ணை­யில், ஸுவை பிர­தி­நி­தித்து அவ­ரது வழக்­க­றி­ஞர் திரு ரெமி சூ வாதிட்­டார்.