சட்ட, ஒழுங்கு குறித்த பொதுமக்கள் கருத்துகள்: ‘கேலப்’ குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடம்

சட்ட, ஒழுங்கு தொடர்­பான பொது­மக்­க­ளின் கண்­ணோட்­டங்­கள் குறித்த குறி­யீடு ஒன்­றில் தொடர்ச்­சி­யாக குறைந்­தது ஆறா­வது ஆண்­டாக சிங்­கப்­பூர் முத­லி­டம் வகிக்­கிறது. கடந்த வார தொடக்­கத்­தில் வெளி­யி­டப்­பட்ட ‘கேலப் 2020 உல­க­ளா­விய சட்ட, ஒழுங்கு அறிக்கை’யில் துர்க்­மெ­னிஸ்­தா­னு­டன் சிங்­கப்­பூர் முத­லி­டம் வகிக்­கிறது. குறைந்­தது 2015ஆம் ஆண்டு முதல் சிங்­கப்­பூர் இந்­தக் குறி­யீட்­டில் முத­லி­டம் வகித்து வரு­கிறது.

100 புள்­ளி­களில் இவ்­விரு நாடு­களும் 97 புள்­ளி­க­ளைப் பெற்­றன. உல­க­ள­வில் சரா­ச­ரி­யாக பெறப்­பட்ட 82 புள்­ளி­க­ளை­விட இது அதி­கம். இவ்­விரு நாடு­க­ளுக்­கும் அடுத்த நிலை­யில் வந்த சீனா, 94 புள்­ளி­க­ளைப் பெற்­றது. அதற்கு அடுத்­த­தாக ஐஸ்­லாந்­தும் குவைத்­தும் வந்­தன. அவ்­விரு நாடு­களும் 93 புள்­ளி­க­ளைப் பெற்­றன. ஆஸ்­தி­ரியா, நார்வே, சுவிட்­சர்­லாந்து, ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள், உஸ்­பெ­கிஸ்­தான் ஆகிய நாடு­கள் இப்­பட்­டி­ய­லின் முதல் 10 இடங்­க­ளைப் பிடித்­துள்­ளன. அந்த நாடு­கள் 92 புள்­ளி­க­ளைப் பெற்­றன.

கடந்த ஆண்டு 144 நாடு­கள் மற்­றும் பிர­தே­சங்­களில், 15 மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய கிட்­டத்­தட்ட 175,000 பேரி­டம் நேர­டி­யா­க­வும் தொலை­பேசி வழி­யா­க­வும் ‘கேலப்’ நிறு­வ­னம் கருத்­து­க­ளைக் கேட்­ட­றிந்­தது. சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்டு ஜூலை முதல் நவம்­பர் வரை 1,040 பேரி­டம் கருத்­து­கள் கேட்­ட­றி­யப்­பட்­டன. குற்­ற­வி­யல், சட்ட அம­லாக்­கம் தொடர்­பில் மக்­க­ளின் பாது­காப்பு உணர்­வைக் கண்­ட­றிய இந்த ஆய்­வில் நான்கு கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டன. தாங்கள் வசிக்­கும் பகு­தி­யில் போலிஸ் மீது தங்­க­ளுக்கு நம்­பிக்கை உள்­ளதா, இர­வில் வெளியே தனி­யாக நடந்­து­செல்­வ­தில் பாது­காப்­பாக உணர்­கின்­ற­னரா போன்ற கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டன. கடந்த 12 மாதங்­களில் தங்­க­ளி­ட­மி­ருந்தோ குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்தோ பணம் அல்­லது சொத்து திரு­டப்­பட்­டதா என்­பது குறித்­தும் கேட்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில், இந்த ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் 97 விழுக்­காட்­டி­னர், இர­வில் தனி­யாக நடந்­து­செல்­வ­தில் தாங்­கள் பாது­காப்­பாக உணர்­வ­தா­கக் குறிப்­பிட்­ட­னர். உல­க­ள­வில் 69 விழுக்­காட்­டி­னர் இர­வில் வெளியே நடந்­து­செல்­வ­தில் பாது­காப்­பாக உணர்­வ­தாக ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது. ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தப் பட்டியலின் ஆகக் கடைசி நிலையில் வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!