ராபின்சன்ஸ் பிரியாவிடை: அலைமோதும் கூட்டம்

ராபின்சன்ஸ் பிரியாவிடை: அலைமோதும் கூட்டம்

2 mins read
e9e1b74e-9a37-494b-8759-c739cc47887f
நேற்று காலை 'தி ஹீரன்' கடைத் தொகுதியில் உள்ள ராபின்சன்ஸ் கடை திறப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட 300 பேர் நீ்ண்ட வரிசையில் காத்திருந்தனர்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் கடந்த 162 ஆண்­டு­க­ளாக வர்த்­த­கம் செய்து வந்த ராபின்­சன்ஸ் சில்­லறை விற்­ப­னைக் குழு­மம் ஆர்ச்­சர்ட் சாலை, ராஃபிள்ஸ் சிட்டி ஆகிய வட்­டா­ரங்­களில் இருக்­கும் தனது கடைசி இரண்டு கடை­க­ளை­யும் மூடு­வ­தாக நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது.

கடைத்­தொ­கு­தி­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளுடன் பேசி வரு­வ­தா­க­வும் அடுத்த சில வாரங்­க­ளுக்குத் தொடர்ந்து இயங்க விரும்­பு­வ­தா­க­வும் ராபின்­சனின் நிர்­வா­கம் தெரி­வித்­தது. இதை­ய­டுத்து, ஆர்ச்­சர்ட் சாலை­யில் உள்ள தி ஹீரன் கடைத்­தொ­கு­தி­யில் உள்ள ராபின்­சன்ஸ் கடை நேற்று காலை 11 மணி அள­வில் திறப்­ப­தற்கு முன்­பா­கவே ஏறத்­தாழ 300 பேர் நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருந்­த­னர். கொவிட்-19 அபா­யத்தை முன்­னிட்டு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இடையே குறைந்­தது ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­யா­வது இருக்க வேண்­டு­ம் என்று வரி­சை­யில் காத்­தி­ருந்­தோ­ருக்கு நினை­வூட்­டப்­பட்­டது. தி ஹீரன் கடைத்­தொ­கு­திக்­குப் பக்­கத்­தில் உள்ள ஆப்­பிள் ஆர்ச்­சர்ட் சாலை கடை வரை வாடிக்­கை­யா­ளர் வரிசை நீண்டு நெளிந்து இருந்தது.

ராபின்­சன்ஸ் கடை­யின் கதவு திறக்­கப்­பட்­ட­தும் வாடிக்­கை­யா­ளர்­கள் அவ­ச­ரப்­ப­டா­மல் ஒழுங்­கான முறையில் உள்ளே சென்­ற­னர். உள்ளே செல்­வ­தற்கு முன்பே அவர்­கள் சேஃப்என்ட்ரி செய­லி­யில் பதிவு செய்­து­கொண்­ட­னர்.

ராபின்­சன்ஸ் மூடு­வ­தற்கு முன்பு ஒரு­முறை பார்க்க வேண்­டும் என்­ப­தற்­காக தமது நண்­பர்­க­ளு­டன் அங்கு வந்­த­தாக 30 வயது காய் ஃபூ தெரி­வித்­தார்.

"பேருந்­தை­விட்டு இறங்­கி­ய­தும் நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருக்­கும் வாடிக்­கை­யா­ளர் கூட்­டத்­தைப் பார்த்து மலைத்­து­விட்­டோம்," என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் ராபின்­சன்­சுக்­கு கிட்­டத்­தட்ட 175 ஊழி­யர்­கள் உள்­ள­னர். துபா­யில் உள்ள அல் ஃபுத்தா­யிம் குழு­மத்­தின்­கீழ் ராபின்­சன்ஸ் உட்­பட மார்க்ஸ் அண்ட் ஸ்பென்­சர், ஸாரா போன்ற பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­கள் உள்­ளன.

இந்த நிறு­வ­னங்­க­ளுக்கு ஊழி­யர்­களை இட­மாற்­றம் செய்ய தன்­னால் ஆன அனைத்­தை­யும் செய்ய திட்­ட­மிட்­டுள்­ள­தாக ராபின்சனின் நிர்­வா­கம் கூறி­யது. நேற்று காலை 11.30 மணி அள­வில் தி ஹீரன் கடைத்­தொ­கு­தி­யில் உள்ள ராபின்­சன்ஸ் கடைக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர்­கள் சென்­ற­போது இரண்­டா­வது மாடி­யில் உள்ள பெண்­க­ளுக்­கான கால­ணிப் பிரிவு பாதி அளவு காலி­யாக இருந்ததாகக் கூறப்படுகிறது.