பொழுதுபோக்கு மையங்களுக்குள் நுழைய முடிந்த ஊழியர்களுக்கு நிம்மதி

பொழுதுபோக்கு மையங்களுக்குள் நுழைய முடிந்த ஊழியர்களுக்கு நிம்மதி

2 mins read
649ac313-e89b-4ed2-8d4e-e86049bbcaba
துவாஸ் சவுத் பொழுதுபோக்கு மையத்தில் காய்கறிகளை வாங்கிய வெளிநாட்டு ஊழியர்கள். கிருமித்தொற்று பாதிப்பு இல்லாத தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பல மாதங்கள் கழித்து, பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.படம்: மனிதவள அமைச்சு -

கி. ஜனார்த்­த­னன்

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் முரு­கா­னந்­தம், 38, தமது நண்­ப­ரும் சக ஊழி­ய­ரு­மான 30 வயது விவேக்­கு­டன் பல மாதங்­க­ளுக்­குப் பிறகு பூன் லேயி­லுள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான பொழு­து­போக்கு மையத்­தி­லுள்ள காப்­பிக் கடை­யில் சோறு, ரசம், கீரை, கறிக்­கு­ழம்பு என வயி­றார முழுச் சாப்­பாடு உண்­ட­னர்.

"கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து கடு­மை­யாக இருந்­தா­லும் அவற்­றுக்­கான கார­ணத்தை நாங்­கள் நன்கு அறிந்­துள்­ளோம்.

"சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­தின் சிறந்த திட்­ட­மி­டு­த­லுக்கு முத­லில் நான் நன்றி தெரி­விக்க விரும்­பு­கி­றேன்," என்று இங்கு கிட்­டத்­தட்ட 18 ஆண்­டு­க­ளா­கப் பணி­

பு­ரிந்­துள்ள திரு முரு­கா­னந்­தம் தெரி­வித்­தார்.

கிட்­டத்­தட்ட எட்டு மாதங்­க­ளாக தங்­க­ளது விடு­தி­களில் அடை

­பட்­டி­ருந்த ஊழி­யர்­களில் சில­ருக்கு நேற்­றைய தினம் ஓர­ளவு விடு­

த­லையை தந்­தது.

கொவிட்-19 நோயாளி எவ­ரும் இல்­லாத ஊழி­யர் தங்­கும் விடு­தி­களில் இருப்­ப­வர்­க­ளுக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான பொழுது ­போக்கு மையங்­க­ளுக்­குச் செல்ல அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கென தற்­போ­து எட்டு பொழு­து­போக்கு மையங்­கள்

உள்­ளன.

இவர்­கள் இந்த மையங்­க­ளுக்குத் தங்­க­ளது ஓய்வு நாட்­களில் காலை 8 மணி முதல் 11 மணி வரை மூன்று மணி நேரத்­திற்கு மட்­டும் அங்கு செல்ல முடி­யும். இதற்­காக 'எஸ்­ஜி­ஒர்க்பாஸ்' (SGWorkPass) வழி­யாக வெளி­யே­றும் அனு­ம­திக்­காக ( 'எக்­சிட் பாஸ்') விண்­ணப்­பிக்­க­வேண்­டும். ஏழு நாட்­க­ளுக்கு முன்­னரே இதற்கு இவர்­கள் விண்­ணப்­பிக்­க­லாம்.

இந்த மையங்­களில் கடை­களில் பொருட்­களை வாங்­கு­வது, சொந்த ஊருக்­குப் பணம் அனுப்­பு­வது, முடி திருத்­து­வது, வெளி இடத்­தில் சாப்­பி­டு­வது போன்­ற­வற்றை நேற்று இவர்­க­ளால் செய்ய முடிந்­தது.

ஆயி­னும், இந்த மையங்­க­ளி­லி­ருந்து தொலை­வில் உள்ள விடுதி­களில் தங்­கும் ஊழி­யர்­

க­ளுக்­குத் தனி­யார் போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட வேண்­டி­உள்­ள­தால் அனை­வ­ரா­லும் இந்த மையங்­க­ளுக்கு நினைத்­த­படி செல்ல முடி­யாது.

இந்­தப் புதிய விதி­மு­றைக்கு முன்பு, வேலை மற்­றும் ஒரு சில தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக ஊழி­யர்­கள் தங்­க­ளது விடு­தி­

க­ளை­விட்டு வெளி­யே­ற­லாம் என்று அர­சாங்­கம் முன்­ன­தாக தெரி­வித்­தி­ருந்­தது.

அர­சாங்க அனு­மதி இருந்­த­போ­தும் தமது வேலை­யி­டத்தில்

அனு­மதி மறுக்கப்பட்டதால் நேற்­றைய தினத்­திற்கு முன்பு தாம் தங்­கி­யி­ருந்த விடு­தி­யை­விட்டு அறவே வெளி­யே­ற முடி­ய­வில்லை என்று 32 வயது சுதா­கர் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

"நான் எட்டு மாதங்­க­ளுக்கு விடு­தி­யில் அடை­பட்­டி­ருந்­தது சிறை­வா­சம் போல இருந்­தது. இப்­போ­து­தான் இந்த மையத்­திற்கு வந்து நான் வெளி­யு­ணவு சாப்­பி­டு­கி­றேன், நேர­டி­யாக பொருட்­களை வாங்­கு­கி­றேன்," என்று கூறி­னார்.

இந்த மையத்­திற்­குச் செல்ல முடிந்­த­தால் மகிழ்ச்­சி­யாக இருப்­ப­தா­கக் கூறிய 32 வயது ரங்­க­

ரா­ஜன், திரைப்­ப­டங்­க­ளைக் காணும் வசதி இருந்தால் மன அழுத்­தம் கணி­ச­மா­கக் குறை­ய­லாம் என நம்­பு­வ­தா­கக் கூறி­னார்.

அத்­து­டன் விளை­யாட்டு வசதி இருந்­தால் சிறப்­பாக இருந்­தா­லும் இப்­போ­தைக்கு இந்த வச­தி­களை அமைத்­துத்­த­ரு­வது கடி­னமே எனத் தாம் உணர்­வ­தாக பிர­காஷ், 28, கூறி­னார்.