தொண்டூழியம், துடிப்புமிக்க வாழ்க்கைமுறை, மனநலம் போன்ற விவகாரங்கள் பற்றி மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்றில் இளையர்கள் நேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
'சிங்கப்பூர் டுகெதர் இமர்ஜிங் கான்வர்சேஷன்' எனும் கலந்துரையாடலில் மொத்தம் 50 இளையர்கள் கலந்துகொண்டனர்.
இரண்டு மணி நேரத்துக்கு நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு அரசாங்க கருத்து சேகரிப்புப் பிரிவான ரீச் ஏற்பாடு செய்தது. கலந்துரையாடலை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் சுகாதார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளரான ரஹாயு மஸாமும் வழி
நடத்தினர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இம்மாதிரி குறைந்தது 20 கலந்துரையாடல்கள் நடத்தப்படும். அவற்றில் சில கலுந்துரையாடல்கள் பங்கேற்பாளர்களின் தாய்மொழியில்
நடத்தப்படும்.

