சிங்கப்பூரில் விளையாட்டுத் துறைக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலையால் மற்ற துறைகளைப் போல விளையாட்டுத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துறையை நம்பியிருப்போருக்கு உதவும் வகையில் $50 மில்லியன் நிதியுதவியை தமது அமைச்சு வழங்கியிருப்பதாக அவர் கூறினார். விளையாட்டுத் துறைக்கு ஆதரவு வழங்கப்படும் அதே நேரத்தில், குழுக்களாக இருந்து விளையாடப்படும் விளையாட்டுகளை மீண்டும் தொடங்குவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்றார் அவர்.

