கிரிக்கெட், திரைப்படங்கள் மற்றும் நாடகத் தொடர்களுக்கான இந்தியாவின் முன்னணி இணையக் காணொளி ஒளிபரப்புச் சேவையான 'ஹாட்ஸ்டார்' செயலி இன்று சிங்கப்பூரில் தொடங்குகிறது.
ஸ்டார் விஜய், ஸ்டார் பிளஸ், நேரடி செய்திகள் உள்ளிட்டவை இந்த ஒரே செயலியில் நேயர்களுக்குக் கிடைக்கும். இதன் அறிமுக சிறப்பு சலுகையாக நேயர்கள் ட்ரீம் 11 ஐபிஎல் 2020 போட்டி களில் எஞ்சியுள்ள நான்கு போட்டிகளை இலவசமாகக் காணலாம்.
சிங்கப்பூரில் இருப்பவர்கள் இன்று முதல் 'ஹாட்ஸ்டார்' இணையத்திற்கு www.hotstar.com/sg அல்லது ஆண்ட்ராய்ட்/ஐஓஎஸ் 'ஹாட்ஸ்டார்' செயலி வழியாக இந்தச் சேவையின் சந்தாதாரர்களாக இணையலாம்.
இதற்கான ஆண்டு சந்தா S$69.98. ஆப்பிள் டிவி, ஆண்ட்ராய்ட் டிவி, கூகல் குரோம்காஸ்ட் ஆகிய சாதனங்களில் இந்தச் சேவை கிடைக்கும். இரண்டு சாதனங்கள் வரை பயனீட்டாளர்கள் ஒரே நேரத்தில் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
'ஹாட்ஸ்டார்' செயலியின் வழியாக வாடிக்கையாளர்கள் 2,000க்கும் மேற்பட்ட படங்களையும் ஏறத்தாழ 900 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் காணலாம். ஸ்டார்ஹப் டிவி பிளஸ் சேவையிலுள்ள 'இந்தியன் பிளஸ்' சேவையுடன் இணைந்திருக்கும் வாடிக்கையாளர்கள் 'ஹாட்ஸ்டார்' சேவையைப் பயன்படுத்தலாம். 'இந்தியன் பிளஸ்' சேவைக்கான மாதாந்திர கட்டணம் 24 மாத ஒப்பந்தத்திற்கு S$15. இந்த கட்டணம் 24 மாத ஒப்பந்தத்தின்கீழ் S$15 ஆகவும் 12 மாத ஒப்பந்தத்தின்கீழ் S$25 ஆகவும் இருக்கும்.

