உச்சிமாடி தோட்டத்தில் மரம் நடும் நாள்: புதிய வரலாறு

2 mins read
c5886b93-1b63-4b3c-90d3-3de979b93403
பிரதமர் லீ சியன் லூங், நேற்று ஹவ்காங்கில் உச்சிமாடித் தோட்டத்தில் பொன்சாய் மரங்களை நட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டின் மரம் நடும் நாள் நேற்று பல புது­மை­களுடன் நடந்­தது. பிர­த­மர் லீ சியன் லூங் ஹவ்­காங்­கில் உச்­சி­மாடித் தோட்­டம் ஒன்­றில் பென்­சாய் மரங்­களை நட்­டார்.

ஆண்­டு­தோ­றும் பின்­பற்­றப்­பட்டு வரும் மரம் நடும் நாளின் 49 ஆண்டு­கால வர­லாற்­றில் முதன்­மு­த­லாக உச்­சி­மாடித் தோட்­டத்­தில் அந்த நிகழ்ச்சி இப்­போ­து­தான் நடந்­தி­ருக்­கிறது.அதோடு மட்­டு­மின்றி, பொது­மக்­களும் முதல்­மு­றை­யாக நேற்று கலந்­து­கொள்­ள­வில்லை. அந்த நாளில் குட்டை ரக பொன்­சாய் மரங்­களும் முதன்­மு­த­லாக நேற்­று­தான் நடப்­பட்­டன.

பிர­த­மர் லீ, அங் மோ கியோ குழுத்­தொ­கு­தி­யைச் சேர்ந்த தன்­சக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களுடன், ஹவ்­காங் அவென்யூ 9ல் உள்ள புளோக் 933ல் இருக்­கும் பல மாடி கார்பேட்டை உச்­சி­யில் உள்ள தோட்­டத்­தில் 10 மரங்­களை நட்­டார். அவர் நட்ட மரங்­க­ளுக்கு 'பௌத்த பைன் மரம்' என்று பெயர்.அந்த நிகழ்ச்­சி­யில் கெபுன் பாரு தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஹென்றி குவெக், இயோ சூ காங் தனித்­தொ­குதி உறுப்­பி­ன­ரான இப் ஹோன் வெங் ஆகி­யோரும் கலந்­து­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரில் மரம் நடும் இயக்­கத்ைத 1963 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் பிர­த­ம­ரான லீ குவான் இயூ தொடங்­கி­வைத்­தார். ஃபாரர் சர்க்­கஸ் என்ற இடத்­தில் வண்ண மலர் மரம் ஒன்றை அவர் நட்­டார்.மரம் நடும் நாள் 1971 நவம்­பர் 7ஆம் தேதி முதன்­மு­த­லாக நடந்­தது. அப்­போது தற்­கா­லிக பிர­த­ம­ராக இருந்த கோ கெங் சுவீ, மவுண்ட் ஃபேபர் மலை உச்­சி­யில் ஊசி­யிலை மரம் ஒன்றை நட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் மரம் நடும் நாள் பொது­வாக நவம்­பர் மாதம் முதல் ஞாயிற்­றுக்­கி­ழமை நடக்­கிறது. ஒவ்­வொரு நகர மன்­ற­மும் தனது நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­டன் மரம் நடும் நிகழ்ச்­சி­களை நடத்­து­கிறது.நேற்று நடந்த நிகழ்ச்சி அங் மோ கியோ நகர மன்­றத்­தின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டது. நேற்று முற்­ப­கல் 11.30 மணி­ய­ள­வில் சுமார் 13,000 பேர் அதைப் பார்த்­த­னர்.

பிர­த­மர் லீ, மரங்­களை நட்ட பிறகு அந்த உச்­சி­மாடித் தோட்­டத்­தின் செடி­கொ­டி­களைச் சுற்றிப் பார்­வை­யிட்­டார்.இதனிடையே, அங் மோ கியோ நகர மன்­றம் 160 விதைப் பொட்ட லங்களை இன்று முதல் விநி­யோ­கிக்­கும். அதை எப்­படி பெற­லாம் என்­பதை அந்த நகர மன்­றத்­தின் ஃபேஸ்புக் மூலம் இதை தெரிந்­து­கொள்­ள­லாம்.