புதிதாக 4 பேருக்கு தொற்று; எல்லாருமே இங்கு வந்தவர்கள்

புதிதாக 4 பேருக்கு தொற்று; எல்லாருமே இங்கு வந்தவர்கள்

2 mins read
00d59ba6-7442-493b-831a-4958bc925977
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக நால்­வ­ருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அந்த நால்­வ­ரும் வெளி­நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள். வீட்­டி­லேயே தங்கி இருக்­க­வேண்­டும் என்று அவர்­க­ளுக்கு உத்­தரவிடப் பட்­டது.

சமூகத் தொற்று யாருக்­கும் இல்லை. வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­தி­யி­லும் யாருக்­கும் புதிதாக தொற்று இல்லை என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. புதி­தாக கிருமி தொற்­றிய நால்­வரை­யும் சேர்த்து இங்கு மொத்­தம் 58,019 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். சனிக்­கி­ழமை புதி­தாக 12 பேருக்கு கெரோனா கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அந்த 12 பேருமே வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள்.வீட்­டி­லேயே தங்கி இருக்­க­வேண்­டும் என்று அவர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது. சனிக்­கிழமை சமூ­கத்­தில் புதி­தாக யாருக்­கும் தொற்று இல்லை.

சனிக்­கி­ழமை புதி­தாக தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்டவர்­களில் ஒரே ஒரு­வர் தவிர வேறு யாருக்­கும் கொவிட்-19 அறி­கு­றி­கள் வெளியே தெரி­ய­வில்லை. அமைச்சு நடத்­திய பரி­சோ­த­னை­கள் மற்­றும் விழிப்பு நிலை கார­ண­மாக, அவர்­களுக்­குத் தொற்று இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

சனிக்­கி­ழமை புதி­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இரண்டு பேர் சிங்­கப்­பூ­ரர்­கள். அவர்­கள் இந்­தோ­னீ­சியா, அமெ­ரிக்­கா­வில் இருந்து வந்­த­வர்­கள். வேறு ஒரு­வர் இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து வந்த நிரந்­த­ர­வாசி. கிரீஸ் நாட்­டில் இருந்து வந்­த­வர் மற்­றொ­ரு­வர். எஞ்­சிய எட்­டு­ பே­ரில் இருவர் பிலிப்­பீன்­சில் இருந்து வந்த வேலை அனு­மதிச் சீட்டு ஊழி­யர்­கள். ஆறு­ பேர் இந்­தோனீசியா­வில் இருந்து வந்த வேலை அனு­மதிச் சீட்டு ஊழி­யர்­கள்.

இத­னி­டையே, கியான் டெக் டார்­மிட்­டரி என்ற வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­தி­யில் கொரோனா கிரு­மிப்பர­வல் கடந்த 28 நாட்­க­ளாக அறவே இல்லை என்று சனிக்­கி­ழமை அமைச்சு அறி­வித்­தது. சமூ­கத்­தில் புதிய தொற்று சென்ற வாரம் 2 ஆகக் குறைந்து­ விட்­டது என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது. சனிக்­கி­ழமை நால்வர் குண­ம­டைந்­த­னர். அவர்­க­ளை­யும் சேர்த்து கொவிட்-19 கிரு­மித் தொற்­றில் இருந்து முழு குணம் அடைந்­த­வர்­கள் எண்­ணிக்கை 57,898 ஆகி­யது. மொத்­தம் 42 பேர் மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்­று­ வரு­கி­றார்­கள். சமூக இடங்­களில் 32 பேர் குண­ம­டைந்து வரு­கி­றார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கார­ண­மாக 28 பேர் மாண்­டு­விட்­ட­னர். கொரோனா தொற்று இருந்­தும் வேறு கார­ணங்­க­ளால் 15 பேர் மரணமடைந்தனர்.