பள்ளிவாசல்களில் 150 பேரை அனுமதிக்க ஏற்பாடு

பள்ளிவாசல்களில் 150 பேரை அனுமதிக்க ஏற்பாடு

1 mins read
9fb3b54b-dbe5-4dc5-8e5b-d632e789b4b1
அல்-அன்சார் பள்ளிவாசல் ஜூலை 9 முதல் சேவைகளைத் தொடங்கியது. திட்டமிட்டபடி இன்று ஜூலை 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. படம்: கூகல் வரைபடம் -

சிங்­கப்­பூ­ரில் 10 பள்­ளி­வா­சல்­களில் முன்­னோடித் திட்­ட­மாக நவம்­பர் 13ஆம் தேதி­மு­தல் வெள்­ளிக்­கிழமை தொழு­கை­களில் 150 பேர் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.

இந்த எண்­ணிக்­கையை இந்த ஆண்டு முடி­வில் 250 ஆக்­கு­வது இலக்கு என்று முயிஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் நேற்று தெரி­வித்­தது.

இந்­தப் புதிய ஏற்­பாடு மூலம் ஒவ்­வொரு பள்­ளி­வா­ச­லி­லும் ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மை­யன்­றும் பிற்­ப­கல் 12.45, பிற்­ப­கல் 1.45, பிற்­ப­கல் 2.45 ஆகிய மூன்று நேரங்­களில் 750 பேர் தொழ­லாம் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அந்த 10 பள்­ளி­வா­சல்­களும் தீவு முழு­வ­தும் உள்­ளன. தொழு­கைக்குச் செல்­வோர் ஒவ்­வொரு பள்­ளி­வா­ச­லி­லும் மூன்று பிரி­வு­களாக அனு­ம­திக்­கப்­ப­டு­வர். ஒவ்­வொரு பிரி­வி­லும் 50 பேர் வரை அனு­மதி உண்டு.

அந்த 10 பள்­ளி­வா­சல்­க­ளி­லும் தொழு­கைக்­குச் செல்­ப­வர்­கள் டிரேஸ்­டு­கெ­தர் செய­லி­யைப் பயன்­ப­டுத்த வேண்­டும்.

இந்­தச் சாத­னங்­கள் அக்­டோ­பர் 23 முதல் சிங்­கப்­பூ­ரில் உள்ள 71 பள்­ளி­வா­சல்­களில் 40ல் கிடைக்­கின்­றன.