'பகுத்தறிவுடன் செயல்படும் சிங்கப்பூர் முஸ்லிம்கள்'

'பகுத்தறிவுடன் செயல்படும் சிங்கப்பூர் முஸ்லிம்கள்'

1 mins read
8e33dfce-3124-4c56-ae7c-182b6122113f
-

சிங்­கப்­பூ­ரில் இஸ்­லாத்­தின் உண்­மை­யான கோட்­பா­டு­களை முஸ்­லிம்­கள் புரிந்­து­கொள்ள இஸ்­லாமிய சம­யத் தலை­வர்­கள் வழி­காட்டி உத­வு­கி­றார்­கள் என்று முஸ்­லிம் விவ­கார அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி தெரி­வித்து இருக்­கி­றார். அன்பு, கரு­ணை­யு­டன் நடந்து­கொள்ள வேண்­டும் என்ற அந்­தக் கோட்­பா­டு­கள், சிங்­கப்­பூ­ரி­லும் சிங்­கப்­பூ­ருக்கு வெளி­யி­லும் எவை நிகழ்ந்­தா­லும் அதன் தொடர்­பில் செயல்­ப­டு­வது உள்­ளிட்ட வாழ்க்­கை­யின் எல்லா அம்­சங்­க­ளுக்­கும் பொருந்­து­கின்­றன என்று அவர் தெரி­வித்­தார்.

உட்­லண்ட்­சில் இருக்­கும் யூசோஃப் இஷாக் பள்­ளி­வா­ச­லில் நபி­கள் நாய­கம் பிறந்த மாதத்தை நினை­வு­கூ­ரும் நிகழ்ச்­சி­யில் கலந்து­கொண்ட அமைச்­சர், பிரான்­சில் அண்­மை­யில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல் பற்றி குறிப்­பிட்­டார்.அந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் மிக­வும் மித­மாக நாம் செயல்­பட்டு இருக்­கி­றோம் என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் முஸ்­லிம்­கள் பகுத்­த­றி­வு­டன் நடந்­து­கொண்டு பல சமூ­கங்­களும் ஒன்று மற்­றொன்றை மரி­யா­தை­யு­டன் நடத்து­கின்­றன என்ற நம்­பிக்­கையை மற்ற சமூ­கங்­க­ளி­டம் ஏற்­ப­டுத்­து­கி­றார்­கள் என்றார் அவர். சிங்­கப்­பூர் முஸ்­லிம்­கள் பொறுமை­யை­யும் மீள்­தி­ற­னை­யும் வெளிப்­ப­டுத்தி வரு­வார்­க­ளே­யா­னால் மற்­ற­வர்­க­ளின் மரி­யா­தைக்­கு­ரிய, தனிச்­சி­றப்பு வாய்ந்த சிறு­பான்மை முஸ்­லிம் சமூ­க­மாக அவர்கள் திகழ முடி­யும் என்று திரு மச­கோஸ் தெரி­வித்­தார்.

பிரான்ஸ் தாக்­குதல்­களை சிங்­கப்­பூர் தலை­வர்­கள் கண்­டித்து இருக்­கி­றார்­கள்.