அங் மோ கியோ நகைக் கடை திருட்டு; வீரமணிக்கு சிறை

1 mins read
6db8c602-f3aa-4851-bb95-2ba83b18dc0d
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

அங் மோ கியோவிலுள்ள நகைக் கடை ஒன்றைக் கொள்ளையடிக்க கும்பலாகச் செயல்பட்ட மூன்று ஆடவர்களில் அவர்கள் தப்பிப்பதற்கான காரை ஓட்டிய 37 வயது வீரமணி சுப்ரன்தாசுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் சுமார் 120,000 வெள்ளி மதிப்பிலான நகைளைச் சூரையாடியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன் கொள்ளை அடித்த 28 வயது எம் ஜகதீஷ், 32 வயது ஷரவிந்திரன் சுப்பையா ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் தொடர்கின்றன. இவர்கள் மூவருமே சிங்கப்பூரர்கள்.

அங் மோ கியோ புளோக் 574ல் உள்ள அந்த நகைக்கடை பார்ப்பதற்குப் பழையதாக இருப்பதாலும் அதில் எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்காது என்பதாலும் கடைக்குச் சொந்தக்காரர்கள் வயதானவர்கள் என்பதாலும் அங்கிருந்து திருடுவது சுலபம் என அவர்கள் எண்ணியிருந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.