எதிர்காலத்தில் சந்தா அதிகரிப்பை ஈடுகட்ட மெடிஷீல்ட் லைஃப்பின் ஒரு பகுதி ஒதுக்கப்படும்

வேலை செய்­வோர் செலுத்­தும் மெடி­ஷீல்ட் லைஃப் சந்­தா­வில் ஒரு பகுதி மக்­க­ளின் வயது கூடும்­போது எதிர்­கால சந்தா அதி­க­ரிப்பை ஈடு­செய்ய ஒதுக்கி வைக்­கப்­படும் என்று சுகா­தார மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இந்­தத் தொகை, இத்­திட்­டத்­தில் உள்ள எதிர்­கா­லத் தேவை­க­ளுக்­குப் பயன்­படும் வகை­யில், காப்­பு­று­தித் திட்ட உரி­மை­யா­ளர்­க­ளின் வாழ்­நாள் முழு­வ­தற்­கும் சரி­ச­ம­மான சந்தா தொகை­யாக விநி­யோ­கிக்க வழி ஏற்­ப­டுத்­தும்.

சிறு­நீ­ரக செய­லி­ழப்பு, புற்­று­நோய் போன்ற அதிக காலம் சிகிச்சை தேவைப்­படும் நோய்­க­ளுக்­கான எதிர்­கால வழங்­கீ­டு­களை அளிப்­பது திட்­டத்­தின் மற்­று­மோர் அம்­சம்.

வர­வி­ருக்­கும் மெடி­ஷீல்ட் லைஃப் சந்தா அதி­க­ரிப்பு பற்­றி­யும் அதனை பாதிப்­புக்­குள்­ளா­கும் பிரி­வி­னர் எவ்­வாறு சமா­ளிப்­பார்­கள் என்று உறுப்­பி­னர்­கள் பலர் கேள்­வி­கள் எழுப்­பி­னர்.

அடுத்த ஆண்­டில் மெடி­ஷீல்ட் லைஃப் திட்­டத்­தில் மாற்­றங்­கள் கொண்டு வரப்­படும் என்­றும் அதில் சந்தா அதி­க­ரிப்பு மூன்­றில் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் சுகா­தார அமைச்சு கடந்த செப்­டம்­ப­ரில் அறி­வித்­தது.

“மக்­க­ளி­ட­மி­ருந்து வசூ­லிக்­கப்­படும் சந்தா தொகை­கள் தற்­போ­தைய மற்­றும் எதிர்­கால வழங்­கீ­டு­கள், எதிர்­கால கடப்­பா­டு­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்­தல், நோய் பர­வுதல் கார­ண­மாக மருத்­து­வ­ம­னைச் செல­வு­கள் அதி­க­ரிப்பு போன்ற எதிர்­பா­ராத சூழ்­நி­லை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும்.

“2016லிருந்து 2019 வரை மெடி­ஷீல்ட் லைஃப் சந்­தாக்­க­ளாக $7.5 பில்­லி­யன் வசூ­லிக்­கப்­பட்­டது. இதில் $4.4 பில்­லி­யன் காப்­பு­று­தித் திட்ட உரி­மை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து நேர­டி­யாக வசூ­லிக்­கப்­பட்­டது.

“சந்தா தொடர்­பான கட்­ட­ணக் கழி­வு­கள், இதர வகை­யான சந்தா ஆத­ரவு என்று அர­சாங்­கத்­தி­டம்­இருந்து $3.1 பில்­லி­யன் திரட்­டப்­பட்­டது.

“அதே கால­கட்­டத்­தில், மொத்­தம் $3.5 பில்­லி­யன் சந்­தா­தா­ரர்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்­கும் $3 பில்­லி­யன் எதிர்­கால சந்தா கட்­ட­ணக் கழி­வு­க­ளுக்­கும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது,” என்­றும் அமைச்­சர் விளக்­கி­னார்.

தற்­போது, குறைந்த மற்­றும் நடுத்­தர வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பங்­கள் மெடி­ஷீல்ட் லைஃப் சந்­தா­வில் 50% கட்­ட­ணக் கழி­வைப் பெறு­கின்­றன.

மெர்­டேக்கா மற்­றும் முன்­னோ­டித் தலை­மு­றை­யி­னர் அதற்கு மேலான கட்­ட­ணக் கழி­வு­க­ளைப் பெறு­கின்­ற­னர் என்று கூறிய டாக்­டர் கோ, மொத்த சந்­தா­வில் 35 விழுக்­காட்டு தொகையை அர­சாங்­கம் பல்­வேறு கட்­ட­ணக் கழி­வு­கள் மற்­றும் ஆத­ர­வுத் திட்­டங்­கள் மூலம் செலுத்­தி­யுள்­ளது என்­றும் சொன்­னார்.

இதற்­கி­டையே, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு தொடர்­பான பண­வீக்­கத்­தைக் கணக்­கி­டு­வது சிர­மம் என்­ப­தால், மெடி­ஷீல்ட் லைஃப் சந்தா அதி­க­ரிப்­பைச் சரி­செய்ய ஒரு குறிப்­பிட்ட முறையை வகுப்பது சாத்­தி­ய­மில்லை என்று கூறிய அமைச்­சர், போக்­கு­வ­ரத்­துக் கட்­டண அதி­க­ரிப்­பைச் சரி­செய்ய மேற்­கொள்­ளப்­படும் ஒரு குறிப்­பிட்ட அணு­கு­முறை­யைப் போல மெடி­ஷீல்ட் லைஃப் சந்தாவில் செய்ய முடியாது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!