கிரேஸ் ஃபூ: முகக்கவசம் அணியும் நடைமுறை தொடரும்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 நிலைமை மெது­வாக சீரடைந்து, மூன்­றாம் கட்­டத் தளர்வு நட­வ­டிக்­கை­களை நெருங்­கிக் கொண்­டி­ருந்­தா­லும், கட்­டாய முகக்கவ­சம் அணி­யும் நடை­மு­றை­யில் மட்­டும் எவ்­வித மாற்­ற­மும் இருக்­காது.

வீட்டை விட்டு வெளியே செல்­லும்­போது மக்­கள் கட்­டா­ய­மாக முகக்கவ­சம் அணி­வது தொடர்ந்து நடை­மு­றை­யில் இருக்­கும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ நேற்று நாடாளுமன்றத்தில் தெரி­வித்­தார்.

“வீட்­டுக்கு வெளியே எல்லா நேரத்­தி­லும் மக்­கள் முகக்கவ­சம் அணிய வேண்­டும். உணவு உண்­ணு­தல், பானம் அருந்­து­தல் அல்­லது கடு­மை­யான உடற்­ப­யிற்சி செய்­தல் ஆகிய செயல்­க­ளில் ஈடுபடும்போது மக்­கள் முகக்கவ­சம் அணிய வேண்­டி­ய­தில்லை. ஆனால், அந்­தச் செயல்­கள் முடிந்­த­வு­டன் அவர்­கள் உட­ன­டி­யாக முகக் கவ­சம் அணிய வேண்­டும்.

“நம்­மைப் பாது­காத்­துக் கொள்­ள­வும் நம்­மு­டன் தொடர்பு வைத்­துக்­கொள்­ளும் மற்­ற­வர்­க­ளுக்கு பாது­காப்பு அளிப்­ப­தற்­கும் முகக்கவ­சம் அணி­தல் பொதுச் சுகா­தா­ரத்­தின் முக்­கிய அம்­ச­மாக தொடர்ந்து விளங்­கும்,” என்­றும் அமைச்­சர் ஃபூ விளக்­கி­னார்.

முகக்கவ­சம் அணி­யா­த­தற்­காக முதல் முறை குற்றம் புரிபவர்களுக்கு $300 அப­ரா­தம் விதிக்­கப்­படும். மறு­முறை பிடி­ப­டு­ப­வர்­க­ளுக்கு கடு­மை­யான அப­ரா­தம் விதிக்­கப்­படும் அல்­லது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­படும்.

முகக்கவ­சம் அணி­யாத ஒரு­வர் இரு­மும்­போது, அவ­ரது இரு­மல் திர­வத் துளி­கள் எட்டு வினா­டி­களில் ஒரு மீட்­டர் தூரத்­துக்கு மேல் பாயக்­கூ­டும் என்று ஏ-ஸ்டார் அமைப்­பின் அண்­மைய ஆய்வு தெரி­விக்­கிறது.

அதே­வே­ளை­யில், முகக்கவ­சம் ஒரு­வ­ரது மூக்­கி­லி­ருந்­தும் வாயி­லி­ருந்­தும் வெளி­யா­கும் திர­வத் துளி­க­ளின் வேகத்­தைக் குறைத்து, கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கிறது.

“பாது­காப்பு தூர இடை­வெ­ளித் தூதர்­க­ளுக்­கும் அம­லாக்க அதி­கா­ரி­க­ளுக்­கும் ஆகக் கடைசி பாது­காப்பு தூர இடை­வெளி விதி­முறை­கள் பற்றி அடிக்­கடி விளக்­கப்­ப­டு­கிறது. அதில் இடங்­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் மற்­றும் பொது­மக்­க­ளி­டம் எவ்­வாறு விதி­மு­றை­கள் பற்றி எடுத்­து­ரைப்­பது என்­ப­தும் அடங்­கும்.

“பாது­காப்பு தூர இடை­வெ­ளித் தூதர்­கள் எங்­கும் எப்­போ­தும் இருக்க மாட்­டார்­கள். முகக்கவ­சம் அணிந்­து­கொள்­ளு­மாறு அவர்­கள் பொது­வாக ஆலோ­ச­னை­தான் கூறு­வார்­கள். ஆகவே, சுய­மாக விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிப்­பது மக்­க­ளின் பொறுப்­பாக இருக்க வேண்­டும்.

“தற்­போது கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை மிக­வும் குறைந்­தி­ருக்­கிறது என்று நாம் மெத்­த­ன­மாக இருந்­து­வி­டக்­கூ­டாது. நாம் தொடர்ந்து விழிப்­பு­நி­லை­யில் இருக்க வேண்­டும், பாது­காப்பு விதி­மு­றை­க­ளைக் கடு­மை­யா­கப் பின்­பற்ற வேண்­டும்,” என்­றும் அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!