திருத்தப்பட்ட மசோதாவின்கீழ் சிறிய, மிகச் சிறிய நிறுவனங்கள் ஒப்பந்தங்களை முன்னதாக முறித்துக்கொள்ளலாம்

திருத்தப்பட்ட மசோதாவின்கீழ் சிறிய, மிகச் சிறிய நிறுவனங்கள் ஒப்பந்தங்களை முன்னதாக முறித்துக்கொள்ளலாம்

2 mins read
75eb0379-1f3e-4c24-af88-521c8465ee1d
-

கொவிட்-19 நில­வ­ரத்­தால் பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள், புதிய விதி­மு­றை­கள் தொடர்­பில் மற்­றொரு தரப்­பு­டன் இணக்­கம் காண முடி­யா­விட்­டால், எவ்­வித தண்­டப்­ப­ண­மும் செலுத்­தா­மல் தங்­கள் ஒப்­பந்­தங்­களை முன்­ன­தா­கவே முறித்­துக்­கொள்­ள­லாம்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று சட்ட இரண்­டாம் அமைச்­சர் எட்­வின் டோங் அறி­மு­கப்­ப­டுத்­திய கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டத்­தில் மேலும் திருத்­தங்­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டன. இதன் தொடர்­பான இரண்­டாம் வாசிப்­பும் விவா­த­மும் இன்று நாடா­ளு­மன்­றத்­தில் இடம்­பெ­றும்.

அர­சாங்க ஒப்­பந்­தங்­கள் உட்­பட வர்த்­தக ஒப்­பந்­தங்­க­ளுக்கு மட்­டும் இந்த மாற்­றங்­கள் பொருந்­தும்.

மறு­சீ­ர­மைப்பு கட்­ட­மைப்பு என்று அழைக்­கப்­படும் இந்­தத் திருத்த மசோதா, ஒரு குறிப்­பிட்ட வரு­மான வரம்­புள்ள, கொவிட்-19 நில­வ­ரத்­தால் குறிப்­பி­டத்­தக்க வரு­மான இழப்பு ஏற்­பட்­டுள்ள வர்த்­த­கங்­க­ளுக்கு மட்­டும் பொருந்­தும்.

இதன் தொடர்­பில் நேற்­றுக் காலை நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய அமைச்­சர் டோங், தொழில்­துறை பங்­கா­ளி­க­ளு­டன் கலந்­தா­லோ­ச­னை­ நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அவற்­றின் முடி­வில் இச்­சட்­டத்­தில் கூடு­தல் அம்­சங்­கள் சேர்த்­துக்­கொள்­ளப்­படும் என்­றும் தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூரில் உள்ள பெரும்­பா­லான சிறிய மற்­றும் மிகச் சிறிய வர்த்­த­கங்­க­ளுக்கு உத­வும் வகை­யில் மாற்­றங்­கள் அமை­யும். இந்­தப் புதிய கட்­ட­மைப்­பால், சிறிய மற்­றும் மிகச் சிறிய வர்த்­த­கங்­கள் தங்­கள் மறு­த­ரப்­பு­டன் தெரி­வு­களை மறு­பரி­சீ­லனை செய்­வ­தற்கு அதி­கா­ரம் அளிக்­கும்," என்­றும் கலா­சார, சமூ, இளை­யர்­துறை அமைச்­ச­ரு­பான திரு டோங் விளக்­கி­னார்.

இந்­தக் கட்­ட­மைப்­புக்­குத் தகுதி பெற ஒப்­பந்­தங்­கள் சிங்­கப்­பூர் சட்­டத்­துக்கு உட்­பட்­டி­ருக்க வேண்­டும். அவை கொவிட்-19 தாக்­கம் தொடங்­கிய மார்ச் 25ஆம் தேதிக்­குள் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டும்.

ஒப்­பந்­தத்­தில் இடம்­பெற்­றுள்ள தரப்­பு­களில் குறைந்­தது ஏதா­வது ஒன்று சிங்­கப்­பூ­ரில் வர்த்­த­கத்­தைத் தொடங்­கி­யி­ருக்க வேண்­டும்.

பய­னீட்­டா­ளர், வேலை­வாய்ப்பு, காப்­பு­றுதி தொடர்­பான ஒப்­பந்­தங்­கள் இந்­தக் கட்­ட­மைப்­பில் இடம்­பெற முடி­யாது.

கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டம் நாடா­ளு­மன்­றத்­தில் முத­லில் இவ்­வாண்டு ஏப்­ர­லில் நிறை­வேற்­றப்­பட்­டது. அதில் தங்­கள் ஒப்­பந்­தங்­களை ஆறு மாதங்­க­ளுக்கு தண்­டப்­ப­ணம் செலுத்­தா­மல் ஒத்­திப்­போட சட்­டம் வகை செய்­தது.

பின்­னர் ஜூன் மாதத்­தில், சட்­டத்­தில் திருத்­தங்­கள் கொண்டு வரப்­பட்­டன.

அதன்­படி, கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் பெரி­தும் பாதிக்­கப்­பட்ட தகுதி பெற்ற சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, நில உரி­மை­யா­ளர்­கள் வாடகை நிவா­ர­ணக் கட்­ட­மைப்­பின் அடிப்­ப­டை­யில் வாடகை விலக்கு அளிக்க வேண்­டும்.

இவ்­வாண்டு செப்­டம்­ப­ரில் சட்­டத்­தில் இரண்­டா­வது முறை­யாக திருத்­தங்­கள் கொண்டு வரப்­பட்­டன.

அதன்­படி, வாடகை நிவா­ர­ணக் கட்­ட­மைப்­பின் அடிப்­ப­டை­யில் வாட­கைத் தொகை­யில் எந்த அள­வுக்கு விலக்கு அளிக்­க­லாம் என்பதை மதிப்பீட்டாளர்கள் மதிப்பீடு செய்து பரிந்துரை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.