லிட்டில் இந்தியாவில் தீபாவளிக் கூட்டம்

லிட்டில் இந்தியாவில் தீபாவளிக் கூட்டம்

2 mins read
05a5bf6d-85d7-46cc-933c-7a0f5397b183
தேக்கா நிலையத்தின் இரண்டாவது தளத்தில் தீபாவளிக்காக நேற்று முன்தினம் தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இவ்­வாண்டு தீபா­வளி விழாக்­காலத்தை முன்­னிட்டு லிட்­டில் இந்­தி­யா­வில் முன்­பைப்­போல விமரிசை­யாக கடை­கள் அமைக்­கப்­ப­டா­விட்டா­லும், ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யான நேற்று முன்­தி­னம் அங்கு மக்­கள் கூட்­டம் அலைமோதியது.

என்­றா­லும், முந்­தைய ஆண்­டு­களை­விட இவ்­வாண்டு வாடிக்­கை­யா­ளர் கூட்­டம் குறைவு என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­திக்­குழு­வி­டம் கடைக்­கா­ரர்­கள் கூறி­னர்.

கொவிட்-19 சூழல் கார­ண­மாக வர்த்­த­கக் கண்­காட்­சி­க­ளுக்கோ தீபா­வ­ளிச் சந்­தைக்கோ இந்த ­ஆண்டு ஏற்­பாடு செய்­யப்­ப­ட­வில்லை.

கேம்­பல் லேனில் ஏற்­கெனவே இயங்கி வரும் வர்த்­த­கங்­க­ளுக்கு வெளியே அவற்­றுக்­குச் சொந்­த­மான கடை­கள் மட்­டும் சிறிய எண்ணிக்­கை­யில் அமைக்­கப்­பட்­டு உள்ளன.

விழாக்­கா­லங்­களில் தற்­கா­லி­க­மாக அமைக்­கப்­படும் கடை­க­ளுக்கு இவ்­வாண்டு இட­மில்லை என்று லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள், மர­பு­டை­மைச் சங்­கத்­தின் (லிஷா) தலை­வர் திரு ராஜ்­கு­மார் சந்­திரா கூறி­னார். ஏற்­கெ­னவே செயல்­பட்டு வரும் வர்த்­த­கங்­கள், அனு­ம­திக்­கப்­பட்ட பகு­தி­களில் மட்­டும் பொருட்­களை விற்க முடி­யும் என்­றார் அவர்.

"பொது­வாக தீபா­வ­ளிச் சந்­தை­களில் கடை நடத்­தும் வர்த்­த­கர்­கள் இம்­முறை இணை­யத்­தில் பொருட்­களை விற்­பனை செய்­கின்­ற­னர். வாடிக்­கை­யா­ளர்­கள் பல­ருக்கு இது வச­தியை ஏற்­ப­டுத்­தித் தந்­தா­லும் பொருட்­களை நேரில் பார்த்து அவற்­றைத் தேர்ந்­தெ­டுக்­கும் அனு­ப­வத்தை இது ஈடு­செய்ய முடி­யாது," என்று அவர் விவ­ரித்­தார்.

பூக்­கள், அலங்­கா­ரங்­கள், தின்­பண்­டங்­கள் போன்­ற­வற்றை விற்­கும் கடைக்­கா­ரர்­கள், கடந்த இரு வார­யி­று­தி­களில் லிட்­டில் இந்­தி­யா­வுக்கு அதி­க­மான வாடிக்­கை­யா­ளர்­கள் வந்­த­தா­கத் தெரி­வித்­த­னர்.

பல­கா­ரங்­கள், முருக்கு வகை­களை விற்­பனை செய்­யும் 'பாவா'ஸ் டெலி­கசி' கடை­யில் பணி­பு­ரி­யும் திரு இக்­பால் ராஜா, 49, இவ்­வாண்டு விற்­பனை சற்று மந்­த­மாக இருந்­தா­லும், இணை­யத்­தில் இந்­நி­று­வ­னம் விற்­கும் பொருட்­க­ளுக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தி­ருப்­ப­தா­கச் சொன்­னார்.

"எங்­க­ளது வழக்­க­மான வாடிக்­கை­யா­ளர்­களில் பலர், இணை­யத்­தில் பொருள் வாங்க விரும்­பு­கின்­ற­னர். ஆனால், புது வாடிக்­கை­யா­ளர்­களில் சிலர் இணை­யத்­தில் பொருள் வாங்­கி­னா­லும், வேறு சிலர் நேரில் பல­கா­ரங்­களை ருசித்­துப் பார்த்து அவற்றை வாங்க விரும்­பு­கின்­ற­னர்," என்­றார் அவர்.

தேக்கா நிலை­யத்­தில் செயல்­படும் குடும்­பத் தொழி­லான 'வாணி'ஸ் டெய்­ல­ரிங்' தையல் கடை­யில் அவ்­வப்­போது உதவி செய்­யும் திரு வெங்­க­டாச்­ச­லம் ஸ்ரீநி­வாசா, 36, கடந்த ஆண்­டு­டன் ஒப்­பு­நோக்க இவ்­வாண்டு வரு­வாய் ஏறத்­தாழ 20 விழுக்­காடு சரிந்­து இ­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

தீபா­வளிக்­காக தற்போது பல­ரும் இணை­யத்­தில் ஆடை­களை வாங்­கு­வதே அதற்­குக் கார­ணம் என்­றார் அவர்.

எனி­னும், இணை­யத்­தில் ஆடை­களை வாங்­கு­ப­வர்­கள் தங்­க­ளது தோற்­றத்­திற்கு ஏற்­றாற்­போல ஆடையை வெட்டி அல்­லது பிடித்துத் தைக்­கும் சேவை­யைப் பெற கூடு­த­லா­னோர் தமது கடையை நாடி வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.