கொலைக்கான மரண தண்டனையிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு தப்பியவருக்கு, போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிப்பு

கொலைக்கான மரண தண்டனையிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு தப்பியவருக்கு, போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிப்பு

1 mins read
5afc67be-11db-457c-a574-b3339ae1ef81
-
Google News Preferred Icon

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனையிலிருந்து தப்பிய 61 வயது ஆடவருக்கு, ஹெராயின் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1994ஆம் ஆண்டில், அப்போது 35 வயதாக இருந்த ரோஷிடி அப்துல்லா அல்ட்வேக்கு, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரியைக் கொன்றதற்காக விதிக்கப்பட்ட மரண தண்டனை, நோக்கமில்லா மரணம் விளைவித்ததாகக் குறிப்பிட்டு 10 ஆண்டு சிறைத் தண்டனையாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் குறைக்கப்பட்டது.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உளவாளியாக இருந்த ரோஷிடி, கண்காணிப்பாளர் ரஜாப் முகமது, 35, தம்மை துப்பாக்கியால் சுட முனைவதாக நினைத்து, தற்காத்துக்கொள்வதற்காக கிரானைட் கல்லால் அடித்ததில், அதிகாரி உயிரிழந்தார்.

அதற்கான 10 ஆண்டு சிறைத் தண்டனையையும் சட்டவிரோதமாக துப்பாக்கி, 6 துப்பாக்கி ரவைகள் வைத்திருந்ததற்காக விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறைத் தண்டனையையும் அவர் ஒரே சமயத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

போதைப்பொருள் உட்கொண்டது, சுபுடெக்ஸ் மாத்திரைகளைக் கடத்தியது போன்றவற்றுக்காக 12 ஆண்டு சிறை, 10 பிரம்படிகள் தண்டனை 2007ஆம் ஆண்டில் ரோஷிடிக்கு விதிக்கப்பட்டது.

காம்பஸ்வேல் லேனில் உள்ள புளோக்கில் $18,000 ரொக்கம், 78.77 கிராம் ஹெராயின் போன்றவை வைத்திருந்ததற்காக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டார் ரஷிடி.

ரஷிடிக்கு மரண தண்டனை விதித்து நேற்று (நவம்பர் 2) நீதிபதி வேலரி தியன் தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்
மரண தண்டனைபோதைப்பொருள்