‘பயணிகள் மீட்பில் சரியான அணுகுமுறை எடுக்கப்பட்டது’

அக்­டோ­பர் மாதம் 14ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூ­ரில் நிகழ்ந்த மோச­மான எம்­ஆர்டி சேவைத் தடை­யின்­போது, பாதி­யில் நின்ற ரயில்­க­ளி­லி­ருந்து பய­ணி­களை மீட்­கும் முயற்­சி­யில் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் சரி­யான முடி­வு­களை எடுத்­தது என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று ஐந்து உறுப்­பி­னர்­கள் ரயில் சேவைத் தடை பற்றி எழுப்­பிய கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த திரு ஓங், சேவைத் தடை­யின்­போது ரயில் நிறு­வ­னம் பய­ணி­களை ரயி­லி­லி­ருந்து மீட்டு, அவர்­களை அடுத்த நிலை­யம் வரை தண்­ட­வா­ளத்­தில் நடக்க வைக்­கும் முடிவை 30 நிமி­டங்­க­ளுக்­குள் எடுத்­தாக வேண்­டும் என்­பது விதி­முறை.

ஆனால், எஸ்­எம்­ஆர்டி 40 நிமி­டங்­கள் கழித்­து­தான் பய­ணி­களை மீட்­கும் முடிவை எடுத்­தது என்று குறிப்­பிட்ட அமைச்­சர், மற்­றொரு நிலை­யத்­தி­லி­ருந்து மின்­சா­ரத்தை இழுத்து, ரயில் சேவையை மீண்­டும் தொடங்­க­லாம் என்ற நம்­பிக்கை நில­வி­ய­தால் சற்று தாம­தம் ஏற்­பட்­டது என்று விளக்­கி­னார்.

இருப்­பி­னும், மற்ற நிலை­யங்­க­ளி­லி­ருந்து மின்­சா­ரத்தை இழுக்­கும் முயற்­சி­யில் வடக்கு-தெற்கு மற்­றும் கிழக்கு-மேற்கு பாதை­களில் ஓடிய ரயில்­க­ளின் சேவை­யும் வட்­டப் பாதை­யில் ஒரு பகுதி சேவை­யும் தடை­பட்­டன.

மூன்று பாதை­களில் நின்­று­போன ரயில்­களில் 6,800 பய­ணி­கள் சிக்கிக்கொண்டனர். அவர்­களில் 78 பேர், மோச­மான வானிலை கார­ண­மாக ஒரு ரயி­லில் மூன்று மணி நேரம் சிக்­கித் தவித்தனர். அவர்­க­ளைக் காப்­பாற்ற அதி­கம் நேரம் எடுத்­துக்­கொண்­டது பற்றி பொது­மக்­கள் குறை­பட்டு கொண்­ட­னர்.

ரயி­லி­லி­ருந்து பய­ணி­களை இறக்­கும் செயல் ஒரு கடைசி முடி­வா­கத்­தான் இருக்­கும். உயர் மின்­சா­ரம் ஓடும் மூன்­றாம் தடத்­தில் ரயில்­கள் ஓடிக்­கொண்­டி­ருக்­கும்­போது தண்­ட­வா­ளத்­தில் இறங்கி பய­ணி­கள் நடப்­ப­தில் உள்ள ஆபத்­து­களே அதற்­குக் கார­ணம் என்று அமைச்­சர் விவ­ரித்­தார்.

“750 வோல்ட் மின்­சா­ரம் ஓடும் தண்­ட­வா­ளத்­துக்­குப் பக்­கத்­தில் நடப்­பது, அது­வும் அந்த இரவு வேளை­யில் வானிலை மோச­மாக இருந்த நேரத்­தில் பய­ணி­களை நடக்க வைப்­பது ஆபத்­தாக முடிந்து­வி­டும்.

“துவாஸ் வெஸ்ட் நீட்­டிப்புப் பாதை­யின் மின்­சார இணைப்­பில் தொடர்ந்து ஏற்­பட்ட மின்­த­டை­யால்­தான் ரயில் சேவைத் தடை நிகழ்ந்­தது என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கண்­ட­றிந்­தது. இந்த சேவைத் தடை­யின் கார­ண­மாக 123,000 பயணிகள் பாதிக்­கப்­பட்­ட­னர். தடை குறித்து மேலும் ஒழுங்கு விசா­ரணை நடந்­து­கொண்­டி­ருப்­ப­தால், சேவை நடத்துநரின் பக்கம் தவறு இருப்பின், தண்டனை விதிக்கப்படும்,” என்றும் அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!