குறைந்த வருமான ஊழியர்களில் 5ல் நால்வர் உயர்நிலைக்குப் பிந்திய கல்வி கற்றவர்கள்

குறைந்த வருமான ஊழியர்களில் 5ல் நால்வர் உயர்நிலைக்குப் பிந்திய கல்வி கற்றவர்கள்

3 mins read
dd5ea474-1bfb-4b42-93fe-20dbd0433870
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம். -

சிங்­கப்­பூ­ரில் கிட்­டத்­தட்ட 30,000 குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் உள்­ள­னர். அவர்­களில் ஐந்­தில் நால்­வர் உயர்­நி­லைக்­குப் பிந்­திய கல்வி கற்­ற­வர்­கள். அவர்­களில் பாதிப் பேர் பெரும்­பா­லும் அலு­வ­லக எழுத்­தர்­கள், உணவு, பானத்­துறை ஊழி­யர்­கள், துப்­பு­ர­வா­ளர்­கள், கடை உத­வி­யா­ளர்­க­ளாக வேலை செய்­கின்­ற­னர். அவர்­கள் உயர்­நி­லைக் கல்வி வரை பயின்­ற­வர்­கள்.

இந்த சிங்­கப்­பூர் ஊழி­யர்­களில் மூன்­றில் ஒரு பகு­திக்கு மேற்­பட்­ட­வர்­க­ளின் வயது 50க்கு மேல். உயர்­நி­லைக் கல்வி பெறா­த­ இவர்­கள் வேலை­யி­ழக்­கும் வாய்ப்பு அதி­கம் உள்­ளது என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

மாதத்­துக்கு $1,300 மேற்­ போகா­மல் சம்­பா­திக்­கும் ஊழி­யர்­க­ளின் விவ­ரங்­களை புக்­கிட் பாஞ்­சாங் தொகுதி உறுப்­பி­னர் திரு லியாங் எங் ஹுவா கேட்­டார்.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு ஸாக்கி, "இந்த ஊழி­யர்­களில் மூன்­றில் ஒரு பகு­தி­யி­ன­ரின் வயது 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்­பட்­டதாக இருக்கும். அவர்­கள் விடு­முறைக் காலத்தில் பகுதிநேர வேலை செய்­பவர்­கள்," என்­றார்.

முன்னதாக, செங்காங் குழுத் தொகுதி உறுப்பினரான பாட்டாளிக் கட்சியின் இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 30,000 முழுநேர ஊழியர்களும் 22,000 சுயதொழில் செய்பவர்களும் மாதம் $1,300க்கும் குறைவான ஊதியம் ஈட்டுகிறார்கள் என்றார்.

மேலும், இந்த 30,000 சிங்­கப்­பூ­ரர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் பேர் $1,300 மாதாந்­திர குடும்ப வரு­மா­னம் ஈட்­டு­வோ­ரு­டன் வசிக்­கின்­ற­னர். அப்­படி என்­றால் அந்­தக் குடும்­பத்­தில் மற்­ற­வர்­க­ளின் வரு­மான ஆத­ர­வும் அவர்களுக்கு உண்டு என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

இந்­தப் பிரிவு ஊழி­யர்­க­ளுக்கு வேலை­ந­லன் கூடு­தல் வரு­மான வழங்­கீ­டு­கள் கொடுக்­கப்­ப­டு­வ­து­டன் அவர்­க­ளுக்கு வேலை­ந­லன் திறன்­கள் ஆத­ர­வுத் திட்­டத்­தி­லி­ருந்தும் உதவி கிட்­டும்.

அதன் மூலம் அவர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பயிற்­சி­களில் சேரும்­போது பயிற்­சிக்­கான ஊக்­கத்­தொ­கை­யும் பயிற்சி முடிந்­த­வுடன் ரொக்­கப் பரி­சும் வழங்­கப்­படும் என்­றார்.

"இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு, அதிக சம்பளத்தையும் பெறுவார்கள். அத்­து­டன் அவர்­க­ளுக்கு அன்­றாட செலவுகளுக்கும் மருத்­துவ செல­வு­க­ளுக்­கும் காம்­கேர், ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு, முதி­யோர் ஆத­ரவு போன்ற மற்ற உத­வி­களும் கிடைக்­கும்," என்­றும் திரு ஸாக்கி சொன்­னார்.

"சிங்­கப்­பூ­ரின் குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்கு சமூகப் பாது­காப்பு அளிப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட முக்­கிய தூண்­தான் வேலை­ந­லன் கூடு­தல் வரு­மா­னத் திட்­டம்.

"குறைந்த கல்வி கற்ற ஊழி­யர்­க­ளுக்கு வேலை­ந­லன் திட்­டம் அதிக ஊக்­கத்­தைத் தந்­துள்­ளது என்று ஆய்­வு­கள் காட்­டு­கின்­றன. குறிப்­பாக, மூத்த வயதுப் பிரி­வி­னர் ஊழி­ய­ர­ணி­யில் நுழைந்து அங்­கேயே நிலைத்­தி­ருக்க இத்­திட்­டம் உத­வு­கிறது.

"இது மிக­வும் முக்­கிய அம்­சம். கார­ணம், ஊழி­ய­ரணி பங்­கேற்பு மூல­மா­கத்­தான் அவர்­க­ளின் குடும்ப வரு­மா­னத்தை உயர்த்த முடி­யும். அவர்­க­ளின் ஓய்­வு­கா­லத்­துக்­காக சேமிக்க முடி­யும்," என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

"கடந்த 2007ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வேலை­நலன் கூடு­தல் வரு­மா­னத் திட்­டம் மூலம் 2019ஆம் ஆண்டு வரை, 890,000 ஊழி­யர்­க­ளுக்கு $6.8 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது.

"கடந்த மூன்று ஆண்­டு­களில் சரா­ச­ரி­யாக, 400,000 பேர் ஒவ்­வோர் ஆண்­டும் வேலை­ந­லன் உத­வித் தொகை­யைப் பெறு­கி­றார்­கள். அவர்­கள் $1,560 முதல் $3,600 வரை வழங்­கீடு பெறு­கி­றார்­கள்," என்­றும் திரு ஸாக்கி கூறி­னார்.