முப்பரிமாண வடிவமைப்பில் துப்பாக்கிகள் அல்லது முக்கிய மான துப்பாக்கிப் பாகங்களை அச்சடிப்பதற்கான மின்னியல் வடிவமைப்பை வைத்திருத்தல் சட்டத்திற்குப் புறம்பான செயலா கிறது. அத்துடன் அங்கீகாரமற்ற நடவடிக்கைகளில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் போன்றவற்றை பயன்படுத்துவது போன்ற குற்றங்களுக்கு இப்போதுள்ள தண்டனையை மேலும் கடுமை யாக்க நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தார் உள்துறை துணை அமைச்சர் டெஸ்மன்ட் டான்.
தீவிரவாதக் குழுக்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் உச்சநிலையில் இருப்பதாகவும் உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சியால் உருவான முப்பரி மாண அச்சு, ட்ரோன் ஆகிய நவீன கருவிகள், இணையம் வழி சட்டவிரோதத் துப்பாக்கி கள் மற்றும் ஆயுதங்கள் தயா ரிப்பது குறித்த தகவல்கள் ஆகியவை நாம் எதிர்கொள்ளும் சவால்கள்.
கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக துப்பாக்கி உரிமத்தை அதிகமா னோர் பெற்றுள்ளனர். இதைத் திறமையுடன் கையாண்டு ஒழுங்குபடுத்தும் தேவை இருப்பதை உள்துறை அமைச்சு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

