மூத்தோருக்கு உதவ சிறு குழு சுற்றுலாக்கள்

மூத்தோருக்கு உதவ சிறு குழு சுற்றுலாக்கள்

1 mins read
84df4ab9-8fcb-46a4-a0d3-a4bb4793ba32
உள்ளூரில் கவரும் இடங்கள், ஹோட்டல்கள், சுற்றுலாக்கள் ஆகியவற்றுக்கு மின்னிலக்கப் பயணத்துறைப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் ரிடிஸ்­க­வர்ஸ் மின்­னி­லக்­கப் பய­ணத்­து­றை பற்­றுச்­சீட்­டு­கள் திட்­டம் அடுத்த மாதம் தொடங்­கும்­போது, அவற்­றைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முதி­ய­வர்­க­ளுக்கு உதவ ஏற்­பா­டு­கள் நடப்­பில் உள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சமூக மன்­றங்­களில் நேரடி முகப்பு­கள் அமைத்து அதன் மூலம் அவர்­க­ளுக்­கான முன்­ப­தி­வைச் செய்­தல், சிறு குழு சுற்­று­லாக்­களை அவர்­க­ளுக்­காக ஏற்­பாடு செய்­தல் போன்­றவை அந்த ஏற்­பா­டு­களில் அடங்­கும் என்று வர்த்­தக தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் விவ­ரித்­தார்.

18 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய சிங்­கப்­பூ­ரர்­கள் இந்­தப் பற்­றுச்­சீட்­டு­களை டிசம்­பர் 1ஆம் தேதி முதல் தங்­கள் சிங்­பா­ஸைப் பயன்­ப­டுத்தி பெற்­றுக்­கொள்­ள­லாம்.

2021ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதி வரை பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூடிய இந்­தப் பய­ணத்­து­றைப் பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில் முதி­யோ­ருக்கு உதவி தேவைப்­ படு­கிறது என்­பதை அர­சாங்­கம் அறி­யும் என்று குறிப்­பிட்ட திரு டான், சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம், மக்­கள் கழ­கத்­து­டன் இணைந்து சில சமூக மன்­றங்­களில் அதா­வது ஒவ்­வொரு வீட­மைப்­புப் பேட்­டை­யிலும் குறைந்­தது ஒரு சமூக மன்­றத்­தில் முகப்­பு­களை அமைக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளது என்­றார்.

இவ்­வாறு தீவு முழு­வ­தும் மொத்­தம் 66 முகப்­பு­கள் அமைக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் டான் தெரி­வித்­தார்.