உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு உதவும் 'டெலிஹெல்த்' திட்டம்

உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு உதவும் 'டெலிஹெல்த்' திட்டம்

1 mins read
c31ab864-6d7f-46a2-a86d-796f106a8fa5
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ரத்த அழுத்த நோயா­ளி­க­ளுக்கு உத­வும் வகை­யில் 'டெலி­ஹேல்த்' திட்­டத்தை அனைத்து பல­துறை மருந்­த­கக் குழு­மங்­களும் அறி­மு­கப்­ப­டுத்­து­கின்­றன.

வீட்­டில் இருந்­த­வாறு புளூ­டூத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தும் சாத­னம் மூலம் ரத்த அழுத்த நோயா­ளி­கள் தங்­கள் ரத்த அழுத்­தம் குறித்த தர­வு­க­ளைப் பல­துறை மருந்­த­கத்­துக்கு அனுப்­ப­லாம். இத­னால் அவர்­கள் அடிக்­கடி பல­துறை மருந்­த­கத்­துக்­குச் செல்ல வேண்­டிய நிலை ஏற்­ப­டாது.

இந்த ரத்த அழுத்த கண்­கா­ணிப்­புத் திட்­டம் ஏறத்­தாழ இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பு அங் மோ கியோ பல­துறை மருந்­த­கத்­தி­லும் கடந்த மாதம் பிடோக் பல­துறை மருந்­த­கத்­தி­லும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

அடுத்த ஆண்­டின் முதல் பாதி­யில் கிள­மெண்டி பல­துறை மருந்­த­கத்­தி­லும் அந்­தச் சாத­னம் வழங்­கப்­படும்.

அடுத்த மூன்று ஆண்­டு­களில் அனைத்து பல­துறை மருந்­த­கங்­களும் இந்­தச் சாத­னத்­தைப் பயன்­ப­டுத்­தும் என்று சுகா­தார அமைச்­சின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு உரு­மாற்­றப் பிரி­வின் நிர்­வாக இயக்­கு­நர் பேரா­சிரி­யர் டான் சோர் சுவான் தெரி­வித்­தார்.