பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் செல்மோன் காலமானார்

1 mins read
cde1fca6-8fa8-45fb-82af-5a770e132acf
கண்­டாங் கெர்­பாவ் மருத்­து­வ­ம­னை­யில் ஆக அதிக ஆண்­டு­கள் பணி­யாற்­றி­ய­வர் டாக்­டர் யிவோன் மார்­ஜோரி செல்­மோன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பழைய கண்­டாங் கெர்­பாவ் மருத்­து­வ­ம­னை­யில் 44 ஆண்­டு­கள் மகப்­பேறு மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்­றிய டாக்­டர் யிவோன் மார்­ஜோரி செல்­மோன் கடந்த மாதம் 28ஆம் தேதி­யன்று கால­மா­னார்.

அவ­ருக்கு வயது 94.

இவர் கண்­டாங் கெர்­பாவ் மருத்­து­வ­ம­னை­யில் ஆக அதிக ஆண்­டு­கள் பணி­யாற்­றி­ய­வர்.

அது­மட்­டு­மல்­லாது, 1961ஆம் ஆண்­டில் ஒட்­டிப் பிறந்த இரட்­டைக் குழந்­தை­க­ளைப் பிரிக்­கும் அறுவை சிகிச்சை சிங்கப்பூரில் முதல்­மு­றை­யாக நடத்­தப்­பட்­டது.

அந்த அறுவை சிகிச்­சையை வெற்­றி­க­ர­மாக செய்து முடித்த பெருமை டாக்­டர் செல்­மோ­னைச் சேரும். டாக்­டர் செல்­மோன் 1996ஆம் ஆண்­டில் பணி­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்­றார்.