'கொவிட்-19 சூழலால் வேலையிடத்தில் சமத்துவம் இல்லாமல் போகலாம்'

'கொவிட்-19 சூழலால் வேலையிடத்தில் சமத்துவம் இல்லாமல் போகலாம்'

2 mins read
64b70d8a-0b60-42c2-b632-2bdd3903a2d3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தற்­போ­தைய கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால், வேலை­யி­டங்­களில் புது­வ­கை­யான சம­மில்லா ஒரு நிலை ஏற்­ப­ட­லாம். இதன்­படி 'வேலை­யி­டத்­தில் இருப்­ப­வர்­கள்', 'வேலை­யி­டத்­து­டன் இணைந்­த­வர்­கள்' என்ற இரு பிரி­வி­னர் உரு­வா­க­லாம்.

ஒரே அலு­வ­ல­கத்­தில், ஒரே அறை­யில் அல்­லது ஒரே கூட்­டத்­தில் நேர­டி­யா­கக் கலந்­து­கொள்­ளும் ஊழி­யர்­களை 'வேலை­யி­டத்­தில் இருப்­ப­வர்­கள்' என்று குறிப்­பி­ட­லாம்.

'ஸூம்' போன்ற இணை­யச் சந்­திப்­பு­கள் மூலம் வேலை தொடர்­பாக உரை­யா­டும் ஊழி­யர்­களை 'வேலை­யி­டத்­து­டன் இணைந்­த­வர்­கள்' என­லாம்.

"தற்­போ­தைய நிலை­யில் நேர­டி­யா­கக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வது அரி­தா­க­வும் சிர­ம­மா­க­வும் ஆகி­விட்ட நிலை­யில், மிக முக்­கி­ய­மா­ன­வர்­க­ளுக்கு மட்­டுமே அந்த வாய்ப்பு தரப்­ப­டு­கிறது," என்று மனி­த­வள ஆலோ­சனை நிறு­வ­னம் ஒன்­றைச் சேர்ந்த திரு லூவிஸ் ஜெராட் குறிப்­பிட்­டார்.

அலு­வ­ல­கத்­தில் நடக்­கக்­கூ­டிய அர­சி­ய­லையே இது மாற்றி அமைக்­கலாம். அறை­யில் இல்­லா­த­வர்­களை­விட அறை­யில் இருப்­ப­வர்­க­ளின் முக்­கி­யத்­து­வம் மேலோங்­க­லாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

முத­லா­ளியை நேரில் பார்த்­துப் பேசி உறவை வளர்த்­துக்­கொள்­வது, நம்­பிக்­கை­யும் வேலை­யில் முன்­னேற்­ற­மும் ஏற்­பட மிக முக்­கி­ய­மா­ன­தாக விளங்­கு­வ­தாக ஊழி­யர்­கள் எண்­ணு­கின்­ற­னர்.

"வேலை செய்­வ­தற்­காக மட்டுமே ஒரு­வர் தம் வேலை­யி­டத்­திற்­குச் செல்­வ­தில்லை. தாம் வேலை செய்­வ­தைப் பிறர் பார்க்க வேண்­டும் என்­ப­தற்­கா­க­வும் அவ­ரின் மதிப்­பைப் பிறர் அறி­ய வேண்டும் என்பதற்காகவும் செல்­கி­றார்­கள்," என்­றார் திரு ஜெராட்.

மற்­றொரு சூழ­லில் ஒரே இடத்­தில் அல்­லா­மல் வெவ்­வேறு இடங்­களில் இருந்­த­வாறு நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் செயல்­பா­டு­களில் ஈடு­ப­ட­லாம். ஊழி­யர்­களில் சிலர், கடற்­கரை விடு­தி­யில்­கூட தங்கி வேலை பார்க்­க­லாம்.

"நிரந்­தர ஏற்­பா­டாக வெவ்­வேறு இடங்­களில் இருந்­த­வாறு வேலை நடக்­க­லாம். தனி­ந­பர் பங்­க­ளிப்பை அள­வி­டும் பணியை நிறு­வ­னங்­கள் மேலும் சிறப்­பா­கச் செய்­யும் நிலை­யில், இத்­த­கைய நிரந்­தர ஏற்­பாடு நிக­ழ­லாம்," என்­றார் திரு ஜெராட்.