சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 4) நண்பகல் நிலவரப்படி புதிதாக 7 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,036 ஆகியுள்ளது.
இன்று பதிவான தொற்றுச் சம்பவங்களில் இரண்டு விடுதிகளில் பதிவானவை. உள்ளூர் சமூகத்தில் யாருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 5 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
கூடுதல் விவரங்களை சுகாதார அமைச்சு பின்னர் அறிவிக்கும்.

