பெண்ணைக் கொடூரமாகக் கொடுமைப்படுத்தியதாக குடும்பத்தார் மீது குற்றச்சாட்டு

தங்களுக்குப் பழக்கமான, கொஞ்சம் அறிவுமந்தக் குறைபாடு உள்ள ஒரு பெண்ணை உடல் ரீதியில் கொடுமைப்படுத்தியதாக ஒரு குடும்பத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஹானி அபுபக்கர் அப்துல்கரிம் அப்துல்ஃபட்டா, 33, என்பவர் அந்தப் பெண்ணைத் தாக்கியதாக நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த ஆடவரின் மனைவியான ஹஸ்லிண்டா இஸ்மாயில், 34, இந்த மாதின் உடன்பிறப்புகளான முகம்மது இஸ்கி இஸ்மாயில், 29, முகம்மது இஸ்கந்தர் இஸ்மாயில், 31, ஹஸ்னிசா இஸ்மாயில், 39, ஆகியோரும் இவர்களின் தாயாரான ஹஸ்மா சுலோங், 69 என்பவரும் சம்பந்தப்பட்ட வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

ஹஸ்லிண்டா, ஹஸ்னிசா, இஸ்கந்தர், இஸ்கி ஆகியோர் நவம்பர் 25ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் தாயார் தொடர்பான வழக்கில், வழக்குக்கு முந்தைய விசாரணை நவம்பர் 30ஆம் தேதி நடக்கும்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இப்போது வயது 30. இவர் இப்போது எந்த நிலையில், எங்கு இருக்கிறார் என்ற விவரங்கள் விசாரணையில் தெரிவிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்மணி, 2016 தொடக்கத்தில் தன் வீட்டைவிட்டு வெளியே ஓடியவர். துரித உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் வேலை பார்த்த உணவகத்திற்கு அருகில் இருந்த பேரங்காடி ஒன்றில் வேலை பார்த்த ஹானி அபுபக்கர் அப்துல் கரிம் அந்தப் பெண்ணுடன் சிநேகமானார்.

பாதிக்கப்பட்ட பெண், ஹஸ்லிண்டாவின் தம்பியான முகம்மது இஸ்ஷாபி இஸ்மாயிலின் உயர்நிலைப்பள்ளி தோழியும் ஆவார்.

இப்படி இருக்கையில், அந்தப் பெண்ணுக்கு முகம்மது இஸ்ஷாபி மூலம் ஹஸ்லிண்டாவின் குடும்பம் பழக்கமானது.

புளோக் 714 உட்லண்ட்ஸ் டிரைவ் முகவரியில் இருந்த ஹஸ்லிண்டாவின் வீட்டிற்கு அந்தப் பெண் அடிக்கடி சென்று வந்தார்.
கடைசியில் அந்தப் பெண் வாடகை இல்லாமல் ஹஸ்லிண்டாவின் வீட்டிலேயே தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். இருந்தாலும் தன் உணவை அவர் தானே வாங்கிக்கொள்ள வேண்டும்.

துணி துவைப்பதற்கும், வரவேற்பறையில் ஒரு மெத்தையில் தூங்குவதற்கும் சேர்த்து மாதம் $150 பணத்தை அவர் ஹஸ்லிண்டாவின் தாயாரிடம் கொடுத்து வந்தார். இதனிடையே, 2016 மே மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடையில் அந்தப் பெண், ஹானி அபுபக்கர் அப்துல்கரிமுடன் பாலியல் செய்கையில் ஈடுபட்டார்.

ஹஸ்லிண்டாவுக்கு இது தெரியவந்தது. அந்தப் பெண்ணை ஹஸ்லிண்டா கன்னத்தில் அறைந்தார். தன் கணவரையும் அப்படியே செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதை அடுத்து ஹஸ்லிண்டாவின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை பல வகைகளில் கொடுமைப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இடுக்கியைக் கொண்டு கால் விரலைத் திருவியது, சுத்தியலைக் கொண்டு அந்தப் பெண்ணின் பல்லில் ஓங்கி அடித்தது, தலையில் பந்து மட்டையைக் கொண்டு தாக்கியது, வெந்நீரை ஊற்றியது முதலான பல கொடுமைகளுக்கும் அந்தப் பெண் ஆளானதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பிறகு ஹஸ்லிண்டாவும் அவருடைய கணவரும் உட்லண்ட்ஸ் ரைஸ் புளோக் 785 ஏ என்ற முகவரி வீட்டுக்குக் குடியேறினர். 2017 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஹஸ்லிண்டா அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்று ஹஜ் பெருநாள் ஆயத்தப் பணிகளில் அவரை உதவிக்கு அமர்த்தினார்.

வீட்டின் சமையலறையில் அந்தப் பெண் கழிவறைக்குப் போகாமலும் தூங்காமலும் நின்றுகொண்டே இருக்கும்படி ஹஸ்லிண்டா பார்த்துக்கொண்டார்.

ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் அங்கேயே அந்தப் பெண் சிறுநீர் கழித்துவிட்டார். அதைப் பார்த்த ஹஸ்லிண்டா துடைப்பம் ஒன்று உடைந்து போகும் வரை அந்தப் பெண்ணை அடித்தார்.

துணி காயவைக்கும் கம்பியாலும் தாக்கிய ஹஸ்லிண்டா, அந்தப் பெண்ணின் கைகளையும் கால்களையும் கட்டினார்.

ஈரமான உடையுடன் அந்தப் பெண் சமையலறையிலேயே நின்று கொண்டிருந்தார். குடும்பத்தினர் வந்தனர்.

ஹஸ்மா அந்தப் பெண்ணுக்காக இரண்டு பொட்டலம் உணவு வாங்கி வந்தார். அதைப் பார்த்த ஹஸ்லிண்டா அந்தப் பொட்டலங்களில் ஒரு பொட்டலத்தை வீசிவிட்டு மற்றொரு பொட்டலத்தில் சிறுநீர் கழித்தார்.

அதைப் சாப்பிடும்படி அந்தப் பெண்ணை ஹஸ்லிண்டா வற்புறுத்தினார். பசி காரணமாக அந்தப் பெண்ணும் இணங்கினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கடைசியாக இந்த விவகாரம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் 2018 ஜனவரி 16ஆம் தேதி அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!