சட்ட அமைச்சர்: பணிப்பெண் மீது வழக்கு தொடுக்க ஆதாரங்கள் இருந்தன

நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, விளக்கமளித்தார் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம்

இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த குமாரி பார்தி லியானி என்ற முன்­னாள் பணிப்­பெண் மீது திருட்­டுக் குற்­றம் சுமத்­தி­ய­தற்­குப் போதிய ஆதா­ரங்­களும் கார­ணங்­களும் இருந்­த­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் தெரி­வித்து இருக்­கி­றார்.

அந்­தப் பெண் உண்­மைக்­குப் புறம்­பா­ன­வர் என்று புலன்­வி­சா­ரணை­யா­ளர்­களும் அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர்­களும் மதிப்­பிட்டு இருந்­த­தா­க­வும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

குமாரி லியானி விவ­கா­ரம் தொடர்­பி­லான அமைச்­சர்­நிலை அறிக்கை ஒன்றை திரு சண்­மு­கம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­தார்.

குமாரி லியா­னிக்கு எதி­ராக சாங்கி விமான நிலை­யக் குழு­மத்­தின் முன்­னாள் தலை­வ­ரான லியூ மன் லியோங்­கும் அவ­ரு­டைய குடும்­பத்­தா­ரும் 2016ஆம் ஆண்­டில் போலி­சில் புகார் தெரி­வித்து இருந்­த­னர்.

ஆனால், திருட்டு தொடர்­பான குற்­றச்­சாட்­டின் பேரில் அந்­தப் பெண் அண்­மை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

இந்த விவ­கா­ரம் பெரும் பிரச்­சி­னை­யைக் கிளப்­பி­யது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மற்­ற­வர்­களும் குற்­ற­வி­யல் நீதி­முறை பற்றி கேள்வி எழுப்­பி­னார்­கள்.

இந்த நிலை­யில், அமைச்­சர் திரு சண்­மு­கம், நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் அமைச்­சர்­நிலை அறிக்­கை­யைத் தாக்­கல் செய்து பேசி­னார்.

குமாரி லியானி கைதா­ன­தற்­குப் பிறகு அனு­மதி இல்­லா­மல் 10 முதல் 15 வரைப்­பட்ட ஆண் உடை­களை எடுத்­துக்­கொண்­ட­தாக ஒப்­புக்­கொண்­டார். அவற்­றில் சில உடை­கள் தொடர்­பில் அவர் அளித்த விளக்­கங்­கள், அவ­ரின் வாக்­கு­மூ­லங்­களில் மாறு­பட்டு இருந்­தன என்று அமைச்­சர் மன்­றத்­தில் குறிப்­பிட்­டார்.

செல்வாக்குமிக்க ஒரு­வர் நீதி­மு­றையை தனக்கு அனு­கூ­ல­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு இருக்­கி­றாரா, போலி­சும் தலை­மைச் சட்ட அலு­வ­ல­க­மும் நியா­ய­மற்ற முறை­யில் அப்­பெண் மீது வழக்­குத் தொடுத்து இருக்­கின்­ற­னவா, அந்­தப் பெண் நியா­ய­மான விசா­ர­ணை­யைப் பெற்­றாரா, பணக்­கா­ரர்­களுக்கு ஒரு சட்­ட­மும் மற்­ற­வர்­களுக்கு ஒரு சட்­ட­மும் இருக்­கிறதா, இவை எல்­லாம் சிங்­கப்­பூருக்கு மிக­வும் முக்­கி­ய­மானவை என்று குறிப்­பிட்ட அமைச்­சர், இத்­த­கைய அனைத்­துக்­கும் தன்­னு­டைய அமைச்­சர்­நிலை அறிக்கை பதி­ல­ளிக்­கும் என்­றார்.

குமாரி லியா­னிக்கு எதி­ரான வழக்கு, வழக்­க­மான திருட்டு விவ­கா­ர­மா­கவே கையா­ளப்­பட்­டது. இதில் எந்த ஒரு­வ­ரும் ஆதிக்­கம் செலுத்த முய­ல­வில்லை.

திருட்­டுக் குற்­றங்­கள் இடம்­பெற்று இருக்க வாய்ப்­பு­கள் உள்­ளன என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­குப் போதிய சாட்­சி­யம் இருந்­தது என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

குமாரி லியானி 2016 டிசம்­பர் 2ஆம் தேதி சிங்­கப்­பூ­ருக்கு திரும்பி வந்­த­போது கைதா­னார். அப்­போது அவ­ரி­டம் இரண்டு லாங்­சாம்ப் பைகள், இரண்டு கடி­கா­ரங்­கள், இரண்டு வெள்­ளை­நிற ஐஃபோன் 4எஸ் கைபே­சி­கள் இருந்­தன.

அந்த இரண்டு கடி­கா­ரங்­களை நண்­பர் ஒரு­வர் அன்­ப­ளிப்­பாகக் கொடுத்­தார் என்று 2016 டிசம்­பர் 4ஆம் தேதி போலிஸ் வாக்­கு­மூலத்­தில் அப்­பெண் தெரி­வித்து இருந்­தார்.

ஆனால் 2017 மே 29ஆம் தேதி அளித்த வாக்குமூலத்தின்போது அவர் வேறு மாதி­ரி­யாகக் கூறி­னார்.

அவ்விரு கடி­கா­ரங்­க­ளை­யும் தான் திரு லியூ மன் லியோங்­கின் புதல்­வி­யான மே என்­ப­வ­ரின் குப்­பைக்­கூ­டை­யில் பார்த்­த­தாக அவர் சொன்­னார்.

பிராடா பை, இரண்டு ஆப்­பிள் ஐஃபோன்­கள், ‘குச்சி’ கண்­ணாடி போன்ற பொருள்­க­ளைக் குப்­பை­யில் தான் கண்­ட­தாக அவர் கூறி­யது நம்­பத்­த­குந்­த­தாக இல்லை என்று தலை­மைச் சட்ட அலு­வ­ல­கம் கரு­தி­ய­தா­க­வும் அமைச்­சர் சண்­மு­கம் நாடா­ளு­மன்றத்­தில் குறிப்­பிட்­டார்.

குமாரி லியா­னி­யின் வாக்­கு­மூலங்­களில் காணப்­பட்ட முரண்­பாடு, குப்­பை­யில் விலை உயர்ந்த பொருள்­கள் காணப்­பட்­ட­தாக அவர் கூறி­யது, ஆண் உடை­களை எடுத்­துக்­கொண்­ட­தாக அவரே ஒப்­புக்­கொண்­டது எல்­லா­வற்­றை­யும் வைத்­துப் பார்க்­கை­யில் அவர் மீது வழக்­குத் தொடுக்க முகாந்­தி­ரம் இருக்­கிறது என்­பதே தலை­மைச் சட்ட அலு­வ­ல­கத்­தின் கருத்து என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

சில நகை­களை குப்­பை­யில் பார்த்­த­தாக குமாரி லியானி கூறி­னார். அதே வேளை­யில், தான் ஒரு­போ­தும் நகை­களை தூக்கி எறி­வ­தில்லை என்­றும் தேவை­ இல்லா­த­வற்றை இரட்­சண்ய சேனைக்கு அல்­லது நண்­பர்­க­ளுக்­குத் தந்து ­வி­டு­வ­தாக திரு­வாட்டி லியூ கூறி­னார்.

இதைப் பார்க்­கும்­போது, திரு­வாட்டி லியூ­வின் சாட்­சி­யம் நம்­பத்தகுந்ததாக இருக்­கிறது என்று தலை­மைச் சட்ட அதிகாரி அலு­வ­ல­கம் மதிப்­பிட்­டது.

குமாரி லியானி மீது வழக்­குத் தொடுப்­ப­தில் தெள்­ளத்­தெ­ளி­வான பொது­ந­லன் இருக்­கிறது என்­றும் தலை­மைச் சட்ட அலு­வ­ல­கம் கரு­து­வ­தாக அமைச்­சர் சொன்­னார்.

நீதி­மன்­றத்­தில் இரு­பது நாள்­களுக்­கும் மேலாக விசா­ரணை நடந்­தது. குமாரி லியா­னி­யின் சாட்­சி­யத்­தில் கடு­மை­யான முரண்­பாடு­கள் இருந்­ததை மாவட்ட நீதி­பதி கண்­டார். அவர் லியூ குடும்­பத்­தி­ன­ரின் சாட்­சி­யங்­களை ஏற்­றுக்­கொண்­டார்.

பன்­னி­ரண்டு அர­சுத் தரப்பு சாட்­சி­யங்­கள், நான்கு தற்­காப்­புத் தரப்பு சாட்­சி­யங்­கள் ஆகி­ய­வற்­றின் வாக்­கு­மூ­லங்­க­ளைச் செவி­ம­டுத்த பிறகு அந்த நீதி­பதி குமாரி லியானி உண்­மைக்­குப் புறம்­பா­ன­வர் என்­ப­தைக் கண்­டார்.

ஆயினும், குமாரி லியானியின் மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் வேறுவிதமாகத் தீர்ப்பளித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!