குற்றவியல் நீதித் துறையை சீரமைக்க சில்வியா கோரிக்கை

குற்றவியல் நீதித் துறையை சீரமைக்க சில்வியா கோரிக்கை

1 mins read
5e5bbe7e-6f50-474b-9c18-a8e1700ae853
படம்: GOV.SG -

சிங்­கப்­பூ­ரின் குற்­ற­வி­யல் நீதி துறை­யில் உள்ள குறை­பா­டு­க­ளைச் சமா­ளிக்க இருமுனை அணு­கு­முறையை பின்­பற்­று­மாறு பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­வர் சில்­வியா லிம் அர­சாங்­கத்­திற்கு அழைப்பு விடுத்­தார். இதில் ஓர் அம்­சம் சமரச அப­ரா­தம், பிணைத் தொகை, வாக்­கு­மூ­லம் பெறு­வது, பயிற்சி, குற்­றச் செய­லுக்கு இலக்­கா­னோ­ரின் நிலைமை முத­லா­னவை இவற்­றில் அடங்­கும். இவற்றை அர­சாங்­கம் நேர­டி­யாக கையா­ள­லாம் என்­றால் தனி­யார் துறை வழக்­க­றி­ஞ­ரான திரு­வாட்டி லிம்.

மற்­றது, அரசு மற்­றும் அர­ச­மைப்பு சட்ட விவ­கா­ரங்­கள் சம்­பந்­தப்­பட்ட சிக்­க­லான பிரச்­சி­னை­கள் தொடர்­பா­னவை. இதற்கு உயர் நீதி­மன்­றம் அர­ச­மைப்­புச் சட்ட ஆணை­யம் ஒன்றை அமைக்­க­லாம் என்­றார் அவர்.

முன்­னாள் பணிப்­பெண் பார்தி லியானி வழக்கு கார­ண­மாக எழுந்த பிரச்­சி­னை­கள் குறித்து பேசு­வ­தற்கு தாக்­கல் செய்­தி­ருந்த தீர்­மா­னத்­தில் அல்­ஜுனிட்-ஹவ்­காங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு­வாட்டி லிம் பேசி­னார்.