கொள்ளை நோய்: தயார்நிலையில் புதிய மருத்துவ நிலையம்

1 mins read
e3d0e4d5-b7a5-409e-af6f-f852c28a2151
தெங்கா விமானத் தள மருத்துவ நிலையத்தில் புதுவகை தொழில்நுட்பங்களைக் கொண்ட முன்னோட்டத் திட்டங்கள் இடம்பெறும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் அடுத்த தலை­முறை மருத்­துவ நிலை­யம், நேற்று அதி­கா­ர­பூர்­வ­மாகத் திறந்து வைக்­கப்­பட்­டது. தனி­மைப்­ப­டுத்­தும் அறை­கள், பரி­சோ­தனை மாதி­ரியை அளிக்­கும் இடம் போன்ற வச­தி­க­ளு­டன் கொள்ளை நோயைச் சமா­ளிக்­கும் தயார்­நி­லை­யில் இப்புதிய நிலை­யம் அமைந்­துள்­ளது.

புது­வகை தொழில்­நுட்­பங்­கள் கொண்ட முன்­னோட்­டத் திட்­டங்­களும் இங்கு அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. தொலை மருந்­துச்­சேவை, மருந்­து­க­ளைப் பெற்­றுக்­கொள்ள சுயச் சேவை 'லாக்­கர்­கள்' போன்­றவை இதில் அடங்­கும்.

இத­னால், உடல்­ந­ல­மில்­லாத சேவை­யா­ளர்­கள் பிற­ரு­டன் தொடர்­பில் வரா­மல் சிகிச்சை பெற்­றுக்­கொள்­ள­லாம். திட்­டம் வெற்றி பெற்­றால், மற்ற ஆயு­தப் படை மருத்­துவ நிலை­யங்­க­ளி­லும் இது நடப்­புக்கு வரும்.

நிலை­யத்­தைத் திறந்து வைத்த தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஹெங் சீ ஹாவ், "கொவிட்-19 உலகை வந்து தாக்­கும் சம­யத்­தில் இந்த நிலை­யம் கட்­டப்­பட்டுள்­ளது. அத­னால், வெவ்­வேறு கருத்­தாக்­கங்­க­ளை­யும் வடி­வ­மைப்­பு­களை­யும் நாம் இங்கு சோதனை செய்து கொவிட்-19 சூழ­லின் தேவை­க­ளுக்கு ஏற்ப புத்­தாக்­கத்தை இணைக்­க­லாம்," என்­றார்.

இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதம் முதல் நிலை­யம் செயல்­ப­டத் தொடங்­கி­யது.