சிங்கப்பூரில் சிறப்புக் கல்விக்குரிய 2 பள்ளிகளுக்கு புது வளாகம்

2 mins read
15d7f7c9-7909-4c4f-8d11-3e1c42e32162
சாவ்யாங் பள்ளிக்கு நேற்று வருகையளித்த கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங் (நடுவில்), மாணவி ஒருவருடன் அளவளாவினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இலே­சான அறி­வுத்­தி­றன் குறை­பாடு உடைய மாண­வர்­க­ளுக்­கான இரு சிறப்­புக் கல்­விக்­கு­ரிய பள்­ளி­கள் வருங்­கா­லத்­தில் புது வளா­கத்­தில் செயல்­படும். கூடு­தல் எண்­ணிக்­கை­யி­லான மாண­வர்­க­ளுக்­குக் கல்வி போதிக்க அப்­பள்­ளி­கள் மறு­சீ­ர­மைக்­கப்­படும்.

சாவ்­யாங் பள்ளி, தங்­ளின் பள்ளி இவ்­வி­ரண்­டும் தொடர்­புத்­தி­றன் குறை­பாடு (ஆட்­டி­சம்) உடைய மாண­வர்­க­ளுக்­குக் கூடு­தல் வச­தி­களை ஏற்­ப­டுத்­தித் தரும். சிறப்­புத் தேவை­யு­டை­யோ­ருக்­கான சங்­கம் இவ்­விரு பள்­ளி­க­ளை­யும் நடத்­து­கிறது.

அங் மோ கியோ­வில் முன்­னாள் டாச்­சி­யாவ் தொடக்­கப் பள்ளி அமைந்­தி­ருந்த தளத்­தில் 2025ஆம் ஆண்­டில் இவ்­விரு பள்­ளி­களும் அமை­ய­வி­ருக்­கின்­றன. சாவ்­யாங் பள்ளி தற்­போது அங் மோ கியோ­வில் அமைந்­துள்­ளது. தங்­ளின் பள்ளி புக்­கிட் மேரா­வில் உள்­ளது.

புதிய வளா­கத்­தில், சாவ்­யாங் பள்ளி தொடக்­க­நிலை மாண­வர்­களுக்­கான 400 இடங்­க­ளை­யும் தங்­ளின் பள்ளி உயர்­நி­லைக்­கான 350 இடங்­க­ளை­யும் வழங்­கும். தற்­போது சாவ்­யாங் பள்­ளி­யில் 320 மாண­வர்­களும் தங்­ளின் பள்­ளி­யில் 260 மாண­வர்­களும் பயில்­கின்­ற­னர்.

சாவ்­யாங் பள்­ளிக்கு நேற்று வரு­கை­ய­ளித்த கல்வி துணை அமைச்­சர் சுன் சூலிங், இவ்­விரு சிறப்­புக் கல்­விக்­கு­ரிய பள்­ளி­க­ளுக்­கான மறு­சீ­ர­மைப்­புத் திட்­டங்­கள் குறித்து விவ­ரித்­தார். சிங்­கப்­பூ­ரின் வட­கி­ழக்கு, மத்­திய பகு­தி­களில் வசிக்­கும் இலே­சான அறி­வுத்­தி­றன் குறை­பாடு உடைய மாண­வர்­களுக்கு கூடு­தல் இடங்­களை ஒதுக்க இந்­தப் பள்­ளி­கள் முற்­படு­வ­தாக அவர் சொன்­னார்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­ச­ரு­மான திரு­மதி சுன், ஒரே தளத்­தில் இரு பள்­ளி­களும் அமைந்­தி­ருந்­தால் பிள்­ளை­களைப் பள்­ளிக்கு அனுப்ப பெற்­றோ­ருக்கு சௌக­ரி­ய­மாக இருக்­கும் என்று குறிப்­பிட்­டார். மாண­வர்­களுக்­கும் பரிச்­ச­ய­மான ஓர் உணர்வை இந்த ஏற்­பாடு வழங்­கும்.

சாவ்­யாங் பள்­ளி­யில் கல்­வியை முடித்த மாண­வர்­களில் 95 விழுக்­காட்­டி­னர், அடுத்­த­கட்ட கல்­விக்­காக தங்­ளின் பள்­ளிக்கு மாறு­கின்­ற­னர்.

இவ்­விரு பள்­ளி­கள் அமை­ய­வி­ருக்­கும் புதிய வளா­கம், மாண­வர்­களின் தேவைக்­கேற்ப கட்­டப்­படும். பெரிய வகுப்­ப­றை­கள், உடற்­கல்வி, விளை­யாட்­டு­கள் போன்­ற­வற்­றுக்­கான இட­வ­ச­தி­கள் இந்த வளா­கத்­தில் இடம்­பெ­றும்.

தங்­ளின் பள்­ளி­யைப் பொறுத்­த­வரை, அப்­பள்ளி மறு­சீ­ர­மைக்­கப்­பட்­ட­வு­டன் மாண­வர்­க­ளின் தொழில்­முறை பயிற்­சிக்­காக கூடு­தல் இடம் ஒதுக்­கப்­படும். இத­னால் பயிற்சி பெறு­வ­தற்­காக மாண­வர்­கள் அதி­கம் அலைய வேண்­டி­ய­தில்லை.

உணவு, பானம், சில்­லறை விற்­பனை, தோட்­டக்­கலை, விருந்­தோ­பல் சேவை ஆகிய நான்கு அம்­சங்­களில் அப்­பள்ளி தனது மாண­வர்­களுக்குப் பயற்சி அளிக்­கிறது.

சாவ்யாங், தங்ளின் பள்ளிகள் மறுசீரமைக்கப்படும்; 2025ல் புது இடத்திற்கு மாறும்