நிறுவனங்கள் வரியைத் தாக்கல் செய்ய புது ஏற்பாடு

நிறுவனங்கள் வரியைத் தாக்கல் செய்ய புது ஏற்பாடு

1 mins read

இவ்­வாண்டு சிறிய நிறு­வ­னங்­கள் மேலும் எளி­தாக வரி­க­ளைத் தாக்­கல் செய்ய முடி­யும். சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட புது ஏற்­பாட்­டின் மூலம் இது சாத்­தி­ய­மா­கும்.

Form C-S (Lite) எனும் மேலும் எளி­மை­யாக்­கப்­பட்ட வரி படி­வம், அந்த ஏற்­பாட்­டின் புதிய அம்­சங்­களில் ஒன்று. நிறு­வ­னங்­க­ளின் கணக்­கி­யல் மென்­பொ­ருள் மூலம் நிறு­வன வரியை நேர­டி­யாக தாக்­கல் செய்ய வகை­செய்­யும் முறை மற்­றோர் அம்­சம்.

நிறு­வ­னங்­க­ளுக்­கான மின்­னி­லக்­கக் குறிப்­பீ­டு­களை ஆணை­யம் வழங்­க­வி­ருக்­கிறது. இவ்­வாண்டு ஏறத்­தாழ 60,000 சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் இந்­தப் புதிய படி­வத்­தைப் பயன்­ப­டுத்தி பய­ன­டை­ய­லாம்.

$200,000 அல்­லது அதற்கு குறை­வாக ஆண்டு வரு­மா­னம் ஈட்­டும் நிறு­வ­னம் இந்­தப் படி­வத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம். இதற்கு வேறு சில தகு­திக்­கூ­று­களும் பொருந்­தும். வரி தொடர்­பான கூடு­த­லான நடை­மு­றை­கள் மின்­னி­லக்­க­ம­ய­மாகி வரும் தற்­போ­தைய சூழ­லில், நிறு­வ­னங்­கள் 'பே நாவ் கியூ­ஆர்' குறி­யீட்­டைக் கொண்டு வரி­யைத் தாக்­கல் செய்­ய­லாம். தாங்­கள் செலுத்த வேண்­டிய தொகை குறித்த ஆக அண்­மைய விவ­ரங்­களை அவை உட­னுக்­கு­டன் தெரிந்­து­கொள்­ள­லாம். வரி­யைத் தாக்­கல் செய்­வது தொடர்­பான குறிப்­பீ­டு­களை உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் கட்­டங்­கட்­ட­மா­கக் குறைக்க முனை­கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்­திற்கு குறிப்­பீ­டு­களில் பெரும்­பா­லா­னவை மின்­னி­லக்க­ம­ய­மாக்­கப்­ப­ட­லாம்.