தாதிமை இல்லங்களில் 2 மாதங்களுக்கு ஒரு முறை தொற்று பரிசோதனை

தாதிமை இல்லங்களில் 2 மாதங்களுக்கு ஒரு முறை தொற்று பரிசோதனை

2 mins read
8dd7da3e-85ca-4975-82b2-77a680904ac8
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மே மாதம் அனைத்து தாதிமை இல்ல ஊழியர்களும் வசிப்பவர்களும் கொவிட்-19க்கு எதிரான பரிசோதனைக்குச் சென்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு குணமான தாதிமை இல்ல ஊழியர்கள்

இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு முறை அனைத்து தாதிமை இல்­லங்­க­ளின் ஊழி­யர்­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான பரி­சோத னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னர்.

இது அந்த இல்­லங்­களில் வசிக்­கும் முதி­ய­வர்­க­ளின் பாது­காப்­பைக் கருத்­தில் கொண்டு நடத்­தப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் பேசிய அமைச்­சின் பேச்­சா­ளர், "இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு முறை தாதிமை இல்­லங்­க­ளில் பணி­யாற்­றும் அனைத்து ஊழி­யர்­களும் கொவிட்-19க்கு எதி­ரான பரி­சோ­தை­னக்­குச் செல்­கின்­ற­னர்.

"சிங்­கப்­பூ­ரின் தாதிமை இல்­லங்­களில் 9,000 ஊழி­யர்­கள் பணி­யாற்­று­கின்­ற­னர். 16,000 முதி­ய­வர்­கள் இந்த இல்­லங்­களில் வசிக்­கின்­ற­னர். தாதிமை இல்­லத்­தில் உள்ள முதி­ய­வர்­க­ளுக்­கும் வரும் மாதங்­களில் கண்­கா­ணிப்­புப் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­படும்," என்றும் அவர் தெரிவித்தார்.

"தாதிமை இல்­லங்­க­ளுடன் தொடர்­பில் இருக்­கும் தொண்­டூ­ழி­யர்­கள், வெளிப்­புற சேவை வழங்­கு­நர்­கள் போன்ற இதர பிரி­வி­ன­ருக்கு எவ்­வாறு 'என்­டி­ஜென்' துரி­தப் பரி­சோ­தனை போன்ற பரி­சோ­த­னையை அறி­மு­கப்­ப­டுத்­த­லாம் என்று அமைச்சு ஆராய்ந்து வரு­கிறது. இதன் மூலம் தாதிமை இல்­லங்­களில் உள்ள முதி­ய­வர்­க­ளின் பாது­காப்பு கட்­டிக்காக்­கப்­ப­டு­கிறது. பாது­காப்பு தளர்வு நட­வ­டிக்­கை­கள் இவ்­வாண்டு இறு­தி­யில் முழு­மை­யாக அமல்­ப­டுப்­ப­டு­வ­தால் அங்­குள்ள முதி­ய­வர்­க­ளுக்கு ஏற்­படும் அபா­ய­மும் அதி­க­ரிக்­கும்," என்­று அந்தப் ­பேச்­சா­ளர் சொன்­னார்.

"முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக கடந்த மே மாதம் அனைத்து தாதிமை இல்ல ஊழி­யர்­களும் வசிப்­ப­வர்­களும் கொவிட்-19க்கு எதி­ரான பரி­சோ­த­னைக்­குச் சென்­ற­னர்.

"அப்­போது நடத்­தப்­பட்ட பெரிய அள­வி­லான பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­யில், சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் கீழ் செயல்­படும் நல்­வாழ்வு மற்­றும் காப்­பக இல்­லங்­க­ளின் பணி­யா­ளர்­களும் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

"சிங்­கப்­பூ­ரில் உள்ள முதி­யோ­ருக்­கான தாதிமை இல்­லங்­களில் வசிப்­ப­வர்­கள், அவற்­றின் ஊழி­யர்­கள் என சுமார் 30,000 பேர் பரி­சோ­திக்­கப்­பட்­ட­னர்.

"கடந்த ஜூலை மாத நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் கீழ் செயல்­படும் 36 முதி­யோ­ருக்­கான தாதிமை இல்­லங்­களில் வசிப்­ப­வர்­களும் ஊழி­யர்­களும் இரு வாரங்­க­ளுக்கு ஒரு முறை 25% மூக்கு மற்­றும் தொண்டை திர­வப் பரி­சோ­த­னைக்கு உட்படுத்தப்பட்டனர்.

"அப்படி என்றால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டன. தாதிமை இல்ல வருகையாளர்களுக்கு தற்போது சோதனை நடத்தப்படுவதில்லை.

"கொவிட்-19 நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணிப்பதுடன், தாதிமை இல்லங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மறுஆய்வு செய்வோம்," என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் விவரித்தார்.