போதைப் பொருள் வழக்கில் சிக்கி மரண தண்டனையிலிருந்து தப்பியவர் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்.
தலைமைச் சட்ட அதிகாரி, இரு துணை தலைமைச் சட்ட அதிகாரி மீது அவரது வழக்கறிஞர் எம். ரவி இழப்பீடு கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மலேசியரான 32 வயது கோபி ஆதவனை கடந்த மாதம் மேல் முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனையிலிருந்து விடுவித்தது. ஆனால் அதற்குப் பதிலாக அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் பத்து பிரம்படிகளையும் அது விதித்தது.
கோபியின் சார்பில் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவ ணங்களில் தற்காப்புத் தரப்பினர் தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக வும் சட்டபூர்வ நடவடிக்கைகளை முறையற்ற வகையில் எடுத்து தனது கட்சிக்காரருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் வழக் கறிஞர் ரவி தெரிவித்துள்ளார்.
நீதி நிர்வாகத்தின் அடிப்படை கடமைகளிலிருந்து அவர்கள் மீறி விட்டதாகவும் ஆவணத்தில் குறிப்பிட்டப்பட்டு உள்ளது.
தங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதை தலை மைச் சட்ட அதிகாரி அலுவலகத் தின் பேச்சாளர் ஒருவர் நேற்று உறுதி செய்தார்.
இந்த வழக்கு, தகுதி இல்லாமல் தொடுக்கப்பட்டு உள்ளது. இதனை தீவிரமாக எதிர்கொள்வோம் என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.

