வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் அதிகரிப்பு; ஒரு மி. வெள்ளிக்கு மேல் 13 வீடுகள் விற்பனை

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விற்பனை குறைந்தாலும் அதன் விலைகள் குறையவில்லை.

கடந்த அக்டோபர் மாதத்தில் முந்தைய மாதத்துடன் ஒப்பிடு கையில் மறுவிற்பனை வீடுகளின் விற்பனை குறைந்தது. ஆனால் கடந்த நான்கு மாதமாக மறு விற்பனை வீட்டின் விலைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரு கின்றன.

எஸ்ஆர்எக்ஸ் சொத்து நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரங்களி லிருந்து இது தெரிய வருகிறது.

குறிப்பாக 13 மறுவிற்பனை வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.

இது, இத்தகைய பரிவர்த்த னைகள் ஒரே மாதத்தில் நடந்தி ருக்கும் அதிக எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்பு 2018ல் ஆக அதிகமாக 11 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள வீடுகள் கைமாறின.

இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் 59 வீவக வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்பட்ட கழக வீடுகளின் விகிதம் இவ்வாண்டின் ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 0.3 விழுக்காடு என்று தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம் விற்கப்பட்ட 13 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீடுகளின் விற்பனை ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 0.5 விழுக் காடாகும். சென்ற மாதம் விற்கப்பட்ட கழக மறுவிற்பனை வீடுகளில் 41.5 விழுக்காடு நான்கறை வீடுகள், 26.4 விழுக்காடு ஐந்தறை வீடுகள், 20.8 விழுக்காடு மூவறை வீடுகள், 9.6 விழுக்காடு எக்சிகியூட்டிவ் வீடுகளாகும். எஞ்சிய வீடுகள் ஈரறை வீடுகள்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கிருமிப் பரவலுக்கு எதிரான தீவிரக் கட்டுப்பாடுகளால் மறுவிற்பனை வீடுகளின் விற்பனை பலவீன மடைந்தது. ஆனால் அதற்கு அடுத்த மாதமே விற்பனை மீண்டும் சூடுபிடித்தது.

இதையடுத்து கடந்த நான்கு மாதமாக தொடர்ந்து மாதம் 2,400 வீடுகளுக்கு மேல் விற்கப்படு கின்றன.

அக்டோபரில் மறுவிற்பனை வீட்டு விலைகள் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.2 விழுக்காடு கூடியது. இந்த விலையேற்றம் கடந்த நான்கு மாதமாக தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!