டெஸ்மண்ட் டான்: மும்முனை அணுகுமுறை தேவை

டெஸ்மண்ட் டான்: மும்முனை அணுகுமுறை தேவை

1 mins read
7540f59e-50fa-4f08-b9de-160326022823
படம்: GOV.SG -

பொரு­ளி­யல், பரு­வ­நிலை குறித்த நோக்­கங்­க­ளுக்கு ஒரே நேரத்­தில் தீர்­வு­காண சிங்­கப்­பூர் மும்­முனை அணு­கு­மு­றையை கைகொள்ள வேண்­டும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் தெரி­வித்­துள்­ளார்.

பசுமை நிதி, குறைந்த கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம், சுற்­றுச்­சூ­ழல் பாதிப்­பு­களில் இருந்து மீள்வதற்கான திறனை வளர்த்­துக்­கொள்­வது ஆகி­ய­வையே அமைச்­சர் குறிப்­பிட்ட அந்த

அணு­கு­மு­றை­கள்.

"தன்­னைப்­பே­ணித்­த­னம், ஏற்­றத்­தாழ்­வு­ அதி­க­ரிப்பு, புவி வெப்ப­ம­ய­மா­தல் உள்­ளிட்ட முந்­தைய போக்­கு­களை கொவிட்-19 நோய்ப் பர­வல் முடுக்­கி­விட்­டுள்­ளது. இப்­போ­தைய கொரோனா நெருக்­க­டி­யோடு பரு­வ­நிலை மாற்­றம் போன்ற நீண்­ட­காலச் சவால்­களை எதிர்­கொள்­வது குறித்­தும் நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. ஆராய்ந்து அறிந்து நீண்ட கால நோக்­கில் திட்­ட­மி­டு­வ­து­தான் எப்­போ­துமே வளர்ச்­சிக்­கான சிங்கப்­பூ­ரின் அணு­கு­மு­றை­யாக இருந்து வரு­கிறது," என்று திரு டான் கூறி­னார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்துக்கும் சிங்­கப்­பூருக்கும் இடை­யி­லான பரு­வ­நிலை மாற்­றம் குறித்த கலந்­து­ரை­யா­டல் நேற்று இடம்­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு பேசி­ய­போது திரு டான் இவ்­வாறு சொன்­னார். கரி­ய­மி­ல­வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்கும் முயற்­சி­களை மேற்­கொள்ள அதி­க­மான நிறு­வ­னங்­கள் முன்­வர வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.