சிங்கப்பூர்-சீனா: 3 துறைகளில் வாய்ப்புகள்

சிங்கப்பூர்-சீனா: 3 துறைகளில் வாய்ப்புகள்

2 mins read
4a16bb6f-ee10-41c0-82f0-1db2388f07b8
படம்: MTI -

சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­வுக்­கும் இடைப்­பட்ட எதிர்­கால ஒத்­து­ழைப்­பில் மூன்று துறை­களில் வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்து இருக்­கி­றார்.

சீனா தன்­னு­டைய உள்­நாட்டு மற்­றும் ஏற்­று­மதி வளர்ச்­சியைச் சீர­மைக்­கிறது. தன்­னு­டைய சந்தை­களை­யும் பொருள் சேவை விநி­யோக தொடர்­பு­க­ளை­யும் பன்மயப்­படுத்து­கிறது.

அந்த நாட்­டின் மக்­கள்­தொ­கை­யில் மாற்­றம் இடம்­பெ­று­கிறது. இந்த மூன்று துறை­களும் இரு நாடு­களின் எதிர்­கால ஒத்­து­ழைப்­புக்­கான வாய்ப்­பு­க­ளைக் கொண்­டி­ருப்­ப­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் தொழில்­துறைக் கூட்­ட­மைப்பு சம்­மே­ள­னம் ஏற்­பாடு செய்த சிங்­கப்­பூர்-சீன வர்த்­தக முத­லீட்டுக் கருத்­த­ரங்கைத் தொடங்கி­வைத்துப் பேசிய அமைச்­சர், சீன அதி­பர் ஸி ஜின்­பிங் உரு­வாக்கி உள்ள ஏற்­று­மதி மற்­றும் உள்­நாட்டு பொரு­ளி­யல் தொடர்­பான இரு அம்ச உத்­தி­க­ளைச் சுட்டினார்.

அந்த உத்­தி­கள் உல­கிற்குப் பல வாய்ப்­பு­களை வழங்­கு­கின்­றன. அவற்றைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டு­மென்­றால் சீனச் சந்­தை­யின் பன்­ம­யத்­தை­யும் சிக்­கல்­க­ளை­யும் ஆழ­மாக நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும் என்­றார் அவர்.

சீனா­வின் மக்­கள்­தொகை மூப்­படைந்து வரு­கிறது. நக­ரங்­களில் மக்­கள்­தொகை அதி­க­ரித்து வரு­கிறது என்­பதைச் சுட்­டிய திரு சான், தர­மான உற்­பத்­திப் பொருட்­க­ளுக்­குத் தேவை கூடு­வ­தா­கத் தெரி­வித்­தார். இவை எல்­லாம் நிறு­வனங்­க­ளுக்குப் புதிய வாய்ப்­பு­களை வழங்­கு­கின்­றன என்­றார் அவர்.

பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம், எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் போன்ற அர­சாங்க அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட்டு சிங்­கப்­பூர் நிறு­வனங்கள் வெளி­நாட்டு சந்­தை­களைச் சிறப்­பா­க புரிந்­து­கொள்ள உத­வும்­படி இந்­தச் சம்­மே­ள­னத்தை அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.

சிங்­கப்­பூர்-சீன உற­வு­கள் கடந்த 30 ஆண்டு காலத்­தில் பல­ம­டைந்து இருப்­பதை அமைச்­ச­ரும் நேற்­றைய கருத்­த­ரங்­கில் உரை­யாற்­றிய சீனாவுக்­கான சிங்­கப்­பூர் தூதர் லூய் டக் இயூ­வும் சுட்­டிக்­காட்­டி­னர்.

சீனா தன்­னு­டைய மேம்­பாட்­டில் அடுத்த கட்­டத்­திற்கு முன்­னே­று­கிறது. இந்த நிலை­யில் சீனாவைப் பற்றி சிங்­கப்­பூர் அணுக்­க­மா­க­வும் ஆழ­மா­க­வும் புரிந்­து­கொள்ள வேண்டும். இந்த முயற்­சிக்கு முடிவே இல்லை என்று அமைச்­சர் திரு சான் குறிப்­பிட்­டார்.

சீனா­வு­டன் சிங்­கப்­பூர் தன்­னு­டைய பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பை வரும் 30 ஆண்­டு­க­ளி­லும் அதற்கு அப்­பா­லும் தொடர்ந்து அக­லப்­ப­டுத்­தும், ஆழப்­ப­டுத்­தும் என்­றும் திரு சான் தெரி­வித்­தார்.