800 குடும்பங்களுக்கு உதவ சத்துணவு திட்டம்

பிள்­ளை­க­ளின் உடல் நல­னுக்கு ஏற்ற உணவை சிறந்த முறை­யில் சமைக்க உத­வும் ஒரு திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

அந்­தத் திட்­டம், குறைந்த வரு­மா­னத்­தைக் கொண்ட 800 குடும்­ப­களுக்கு உத­வும். ஒவ்­வொரு குடும்­ப­மும் சத்­து­ண­வுப் பொட்­டலம் ஒன்றைப் பெறும்.

அதில் கைக்­கு­ழந்­தை­கள், பாலர்­பள்ளி செல்­லும் வய­தில் உள்ள குழந்­தை­க­ளுக்­குப் பால், வைட்­ட­மின்­கள், கைக்­கு­ழந்தை ரொட்­டி­கள் எல்­லாம் இருக்­கும்.

இந்­தப் புதிய திட்­டத்தை புரூ­டென்­ஷி­யல் சிங்­கப்­பூர் காப்­பு­றுதி நிறு­வ­ன­மும் பாலர் மேம்­பாட்டு முகவை­யும் (ECDA) சேர்ந்து நடப்­புக்கு கொண்டு வந்­துள்­ளன.

புதிய திட்­டத்­துக்கு ‘ஹெல்த்தி வித் கிட்ஸ்­டார்ட்’ என்று பெயர்.

அந்த 800 குடும்­ப­ங்களில் 200 குடும்­பங்­க­ளுக்கு அக்­டோ­பர் மாதம் பழங்­கள், காய்­க­றி­கள் கொடுக்­கப்­பட்­டன. இந்த மாத­மும் அடுத்த மாத­மும் தொடர்ந்து அவை வழங்­கப்­படும்.

சத்­து­ண­வுத் திட்ட தொடக்க நிகழ்ச்சி, நேற்று மரினா ஒன் பகுதி­யில் உள்ள புரூ­டென்­ஷி­யல் அலு­வ­ல­கத்­தில் நடந்­தது. சமு­தாய, குடும்ப மேம்­பாடு மற்­றும் கல்­வித் துணை அமைச்­சர் சுன் சூலிங் அதில் கலந்­து­கொண்­டார்.

இவர், புரூ­டென்­ஷி­யல் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்வாக அதி­காரி டெனிஸ் டானு­டன் சேர்ந்து சத்­து­ணவு தயா­ரிப்­பில் ஈடு­பட்­டார்.

பாலர் மேம்­பாட்டு முக­வை­யின் இத்­திட்­டத்­தில் பலன் அடை­யும் 800 குடும்­பங்­கள் ஏழு வய­துக்­கும் குறைந்த வயதுள்ள பிள்­ளை­க­ளைக் கொண்­டவை. குறைந்த வரு­மா­னம் உள்­ளவை. இந்­தக் குடும்­பங்­கள், புரூ­டென்­ஷி­யல் சிங்­கப்­பூர் நடத்­தும் ‘பல்ஸ் கம்­யூ­னிட்­டீஸ்’ என்ற இணை­யத் தள இணைப்­பை­யும் பெற உதவி கிடைக்­கும்.

பிள்­ளை­க­ளுக்­குப் பொருத்­த­மான உணவு எது என்­பது போன்ற சத்­து­ணவு பற்­றிய பல தக­வல்­களை அந்­தத் தளத்­தில் இக்­கு­டும்­பங்­கள் பெற­லாம். காணொ­ளி­கள் உத­வி­யும் கிடைக்­கும்.

இந்­தக் குடும்­பத்­தி­னர், இந்த இணை­யத்தளம் வழி­யாக புரூ­டென்­ஷி­யல் தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் தொடர்­பு­கொண்டு சுகா­தார ஆலோ­ச­னை­களை­யும் பெற­லாம்.

ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ருக்கு ஊக்­க­மூட்டி சத்­தான உண­வைச் சமைத்து நல்ல உண­வை உண்ணவும் பரஸ்­பரம் உத­விக்­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!