பொருட்கள் தீரும் வரை ராபின்சன்ஸ் கடைகளில் தள்ளுபடி விற்பனை

பொருட்கள் தீரும் வரை ராபின்சன்ஸ் கடைகளில் தள்ளுபடி விற்பனை

1 mins read
90702d46-d537-4c3f-9c5a-6c98bc1b5be9
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் ராபின்­சன்ஸ் நிறு­வ­னம் தனது இரு கிளை­க­ளை­யும் மூட­வி­ருப்­ப­தால் அதன் தொடர்­பி­லான சிறப்பு விற்­பனை நேற்று தொடங்­கி­யது.

அதன் இரு கிளை­கள் 'த ஹீரன்', 'ராஃபிள்ஸ் சிட்டி' கடைத் தொகுதி ஆகிய இடங்­களில் உள்­ளன. அங்­குள்ள ஆடை அலங்­கா­ரம், அழ­குப் பொருட்­கள், இல்­லத்­தில் பயன்­படுத்­தும் பொருட்­கள், பய­ணத்­துக்­கான பொருட்­கள் என அனைத்­தும் கழிவு விலை­யில் விற்­கப்­ப­டு­கின்­றன,

"எல்லா பொருட்­க­ளின் விலை­யும் குறைக்­கப்­பட்­டுள்­ளன. வாடிக்­கை­யா­ளர்­கள் இந்த அரிய வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி, கழிவு விலை­யில் பொருட்­களை வாங்­கிச் செல்­லுங்­கள்," என்று ராபின்­சன்ஸ் நிறு­வ­னத்­தின் விற்பனை விளம்பரத்துக்குப் பொறுப்பு வகிக்கும் பி.டபிள்யூ.பி குழுமம் தெரிவித்தது.