மின்னிலக்கமயமாதலுக்கு மாற $6.8மில்லியன் மானிய உதவி

தங்­கள் வர்த்­த­கத்­தில் மின்­னி­லக்­க­ம­ய­மா­தலை அறி­மு­கப்­ப­டுத்த ஆத­ர­வ­ளித்­த­தற்­காக, சில்­லறை விற்­பனை மற்­றும் உண­வுச் சேவை துறை­களில் உள்ள சுமார் 2,700 உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளுக்கு அர­சாங்­கம் கிட்­டத்­தட்ட $6.8 மில்­லி­யன் தொகையை மானி­ய­மாக வழங்­கி­யுள்­ளது என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

மின்­னி­லக்க மீள்­தி­ற­னுக்­கான ஊக்­கத்­தொ­கை­யாக வழங்­கப்­பட்ட அந்த மானி­யத் திட்­டம் மூலம், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதிக்­குள் தங்­கள் வர்த்­த­கத்­தில், மூன்று பிரி­வு­களில் ஏதா­வது ஒன்­றின் வழி மின்­னி­லக்­கத் தீர்­வு­களை அறி­மு­கப்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு $10,000 வரை மானி­யம் அளிக்­கப்­படும்.

நிறு­வ­னங்­கள் தங்­கள் மனி­த­வளம், சம்­ப­ளம் வழங்­கும் செயல்­முறை, மின் வர்த்­த­கம் மூலம் இணை­ய­வா­சல் உரு­வாக்­கம், தர­வுப் பகுப்­பாய்வை தேர்வு செய்­தல் போன்­ற­வற்­றில் மின்­னி­லக்­கத்தை அறி­மு­கப்­ப­டுத்­த­லாம்.

“கொவிட்-19 விளை­வு­க­ளால் நாம் பெற்ற அனு­ப­வம், மின்­னி­லக்­கத் தீர்­வு­க­ளுக்­கான விழிப்­பு­ணர்­வின் முக்­கி­யத்­து­வத்தை எடுத்­து­ரைத்­தி­ருக்­கிறது. அதன் கார­ண­மாக, நிறு­வ­னங்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்க இந்­தத் தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது,” என்று அமைச்­சர் ஈஸ்­வ­ரன் நேற்று ஃபூனான் கடைத்­தொ­கு­தி­யில் மின்­னி­லக்க மீள்­தி­ற­னுக்­கான ஊக்­கத்­தொ­கை­யைப் பெற்ற இரு நிறு­வ­னங்­க­ளின் செய­லாக்­கத்­தைப் பார்­வை­யி­டு­வ­தற்கு முன் பேசினார்.

வடி­வ­மைப்பு மற்­றும் தோட்­டக்­க­லை­யைப் பிர­ப­லப்­ப­டுத்­தும் நிறு­வ­ன­மான ‘த கிரீன் கேப்­சுல்’, மின்­ன ணு வி­யல் பொருட்­களை விற்­பனை செய்­யும் ‘டிகே ஃபோட்டோ’ ஆகி­யவை அந்த இரு நிறு­வ­னங்­கள்.

“இந்த விழிப்­பு­ணர்வு, கோ டிஜிட்­டல் எனும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் திட்­டத்­தில் சேரும் நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்­கையை கடந்த ஆறு மாதங்­களில் இரட்­டிப்­பாக்கி உள்­ளது,” என்­றும் மேலும் அமைச்­சர் கூறி­னார்.

கடந்த ஏப்­ரல் மாதத்­தில் தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ‘கோ டிஜிட்­டல்’ திட்­டம் மூலம் மின்­னி­லக்க மீள்­தி­ற­னுக்­கான ஊக்­கத்­தொகை, தொழில்­துறை மின்­னி­லக்­கத் திட்­டங்­கள், முன்­னரே அனு­ம­தி­யளிக்­கப்­பட்ட மின்­னி­லக்­கத் தீர்வு­கள் போன்ற உத­வி­களை நிறு­வ­னங்­கள் பெற முடியும்.

கடந்த செப்­டம்­பர் மாதம் வரை 50,000 சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் முன்­னரே அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்ட மின்­னி­லக்­கத் தீர்­வு­களை ஏற்­றுக்­கொண்­டன என்றும் தெரி விக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!