சிக்கிக்கொண்ட கம்பிவடமே நொவீனா பாரந்தூக்கி விபத்துக்கு காரணம்

சிக்கிக்கொண்ட கம்பிவடமே நொவீனா பாரந்தூக்கி விபத்துக்கு காரணம்

2 mins read
29933e37-f008-4892-8cd4-267650637ef6
நொவீனா கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்தவிபத்துக்குப் பிறகு, பாரந் தூக்கியின் உத்திரம் முறிந்துக் கிடப்பதை படத்தில் காணலாம். படம்: மனிதவள அமைச்சு -

நொவீனா கட்­டு­மா­னத் தளத்­தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வர் மர­ண­ம­டைந்­தார். மற்­றோர் ஊழி­யர் காய­ம­டைந்­தார்.

இச்­சம்­பவத்­துக்­குப் பிறகு, கட்டு­மா­னத் தளங்­களில் பயன்­ப­டுத்­தப்­படும் பாரந்­தூக்­கி­யின் பாகங்­கள் செயல்­படும் விதத்­தில் மாற்­றங்­கள் கொண்டு வரப்­பட வேண்­டும் என்று மனி­த­வள அமைச்சு கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

பாரந்­தூக்­கி­யில் உள்ள மேல் எழும்­பச் செய்­யும் கம்பி வடங்­கள் அதி­லி­ருந்து அகற்­றப்­பட வேண்­டும் அல்­லது துண்­டிக்­கப்­பட வேண்­டும். அதன் பிறகு அது வலு­வாக பிணைக்­கப்­பட வேண்­டும் என்று கூறிய அமைச்சு, வேலை நடந்­து­கொண்­டி­ருக்­கும்­போது அந்­தக் கம்பி வடங்­க­ளைப் பாரந்­தூக்­கி­யிலேயே இருக்­கு­மாறு சில பாரந்­தூக்கி தயா­ரிப்­பா­ளர்­கள் விட்டு விடு­கின்­ற­னர் என்­றும் சுட்­டி­யது.

மேற்­கூ­றிய விபத்­தில் நடந்­த­வற்றை ஒரு படிப்­பி­னை­யாக ஏற்­றுக்­கொண்டு, பாரந்­தூக்­கி­களை இன்­னும் பாது­காப்­பா­கப் பயன்­ப­டுத்த கட்­டு­மா­னத் தொழில்­து­றையை ஊக்­கு­விக்க, அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் இந்­தக் கூடு­தல் பாது­காப்பு அம்­சங்­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த ஆண்டு நவம்­பர் 4ஆம் தேதி டான் டோக் செங் லிங்க் சாலை­யில் உள்ள கட்­டு­மா­னத் தளத்­தில், ஒரு பாரந்­தூக்கி 300 கிலோ கிராம் எடை­யைத் தூக்­கிக்­கொண்­டி­ருந்­த­போது, அதன் செய­லாக்­கம் நின்­று­விட்­டது.

அந்­தத் தளத்­தில் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் ஒரு பகு­தி­யான நோயா­ளி­கள் மறு­வாழ்வு நிலை­யத்­தின் கட்­டு­மா­னப் பணி­கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தன.

பாரந்­தூக்­கி­யு­டன் இணைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு கம்பி வடம் சிக்­கிக்­கொண்­ட­தால், பாரந்­தூக்­கி­யின் குறுக்கு உத்­தி­ரத்­தால் கீழ் நோக்கி நகர முடி­ய­வில்லை.

பின்­னர் திடீ­ரென, அந்­தக் கம்பி வடத்­தின் சிக்­கல் முடிச்சு தானாக அவிழ, அது பிடித்­தி­ருந்த குறுக்கு உத்­தி­ரம் கீழே சரியத் தொடங்­கி­யது. இருந்­தும் அத­னால் விபத்து நிக­ழ­வில்லை.

நிர்­ண­யிக்­கப்­பட்ட பாரத்­தின் அள­வைக் காட்­டி­லும் கூடு­த­லான பாரத்தை அந்­தப் பாரந்­தூக்கி தூக்­க­வில்லை.

அந்­தக் குறுக்கு உத்­தி­ரம் தூக்கி­யி­ருந்த பார­மும் அத­னைப் பிடித்­தி­ருந்த கொக்­கி­யும் விழுந்து கீழே வேலை செய்­து­கொண்­டி­ருந்த இரு ஊழி­யர்­க­ளைத் தாக்­கி­யது.

அந்த விபத்­தில் 28 வயது இந்திய ஊழி­ய­ரான முத்­தை­யன் வேல்­மு­ரு­கன் மாண்­டார். 35 வயது பங்­ளா­தேஷ் ஊழி­யர் ஒரு­வ­ருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்­பட்­டது.

பாரந்­தூக்­கி­யின் உச்­சி­யில் குறுக்கு உத்­தி­ரத்­தைப் பிடித்­துக்­கொள்ள கம்பி வடங்­கள் பொது­வா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

பாரந்­தூக்­கி­யின் உச்­சி­யில் குறுக்கு உத்­தி­ரம் பொருத்­தப்­பட்­ட­வு­டன் கம்பி வடங்­கள் பாரந்­தூக்கி­யி­லி­ருந்து அகற்­றப்­பட வேண்­டும் என்று சில பாரந்­தூக்கி தயா­ரிப்­பா­ளர்­கள் பரிந்­து­ரைத்­தா­லும், கம்பி வடங்­கள் பாரந்­தூக்­கி­யி­லி­ருந்து அகற்­றப்­ப­டா­மல் இருந்­தால், குறுக்கு உத்­தி­ரத்­தின் பரா­ம­ரிப்­புக்கு அது உறு­து­ணை­யாக இருக்­கும் என்று சில தயா­ரிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

பாரத்தை மேலே கொண்டு வரும் கம்பி வடம் கார­ண­மாக நிகழ்ந்த பாரந்­தூக்கி விபத்து என்று பார்த்­தால் உல­கில் இது­தான் முதல் சம்­ப­வம் என்று அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருந்த அமைச்சு, இதில் உள்ள படிப்­பி­னை­களை நன்கு ஆராய்ந்து இது­போன்ற சம்­ப­வங்­கள் மீண்­டும் நிகழ்­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யது.