கட்டுப்பாடுகளுடன் இரவுநேர வர்த்தகங்கள் மீண்டும் இயங்கும்

கட்டுப்பாடுகளுடன் இரவுநேர வர்த்தகங்கள் மீண்டும் இயங்கும்

2 mins read
b5c4a721-1a2f-4387-9ef7-f9ddd8b8f917
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடு­மை­யான பாது­காப்பு நிர்­வாக விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டித்­த­வாறு குறிப்­பிட்ட சில இர­வு­நேர வர்த்­த­கங்­கள் டிசம்­பர் மாதத்­திற்­குள் மீண்­டும் இயங்­கத் தொடங்­க­லாம் என்று அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது. இதன் தொடர்­பில் இரண்டு மாத முன்­னோட்­டத் திட்­டம் ஒன்று தொடங்­க­வுள்­ளது.

ஆடல் அரங்­கில் இருப்­போர் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருப்­பது, உள்ளே நுழை­வ­தற்கு முன் கொவிட்-19 கிரு­மித்­தொற்று இல்லை என்று பரி­சோ­தனை முடி­வு­களை ஆதா­ர­மா­கக் காட்­டு­வது போன்ற நட­வ­டிக்­கை­கள் இத்­திட்­டத்­தில் அமைந்­தி­டும்.

கிட்­டத்­தட்ட ஒன்­பது மாதங்­களாக கொவிட்-19 நெருக்­க­டி­யால் மூட வேண்­டிய நிலைக்கு உல்­லாச விடு­தி­கள், 'கரா­வோக்கே' கூடங்­கள், மது­பா­னக் கூடங்­கள் போன்ற இடங்­கள் தள்­ளப்­பட்­டன. வியா­பா­ரம் பாதிக்­கப்­பட்­ட­து­டன் சில நிரந்­த­ர­மாக மூடி­யும் விட்­டன. இந்­நி­லை­யில், இரவு­நேர வர்த்­த­கங்­கள் மீண்­டும் உயிர்ப்­பிக்­கப்­படு­வதை புதிய அறி­விப்பு குறிப்­ப­தாக உள்­ளது.

இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 59 இர­வுக் கூடங்­கள், நடன விடு­தி­கள், காரா­வோக்கே இடங்­கள் மூடி­விட்­ட­தாக கணக்­கி­யல், நிறு­வ­னக் கட்­டுப்­பாட்டு ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து முன்­னோட்­டத் திட்­டத்­தில் பங்­கேற்க, குறைந்த எண்­ணிக்­கை­யி­லான இர­வு­நேர வர்த்­த­கங்­களை அடை­யா­ளங்­கண்டு வரு­வ­தாக வர்த்­தக, தொழில் அமைச்சு மற்­றும் உள்­துறை அமைச்சு தங்­கள் கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

மது­பா­னக் கூடங்­க­ளுக்­கான முன்­னோட்­டத் திட்­டம் டிசம்­பர் மாதத்­தில் தொடங்­கும். கரா­வோக்கே மற்­றும் இர­வு­நேர விடுதி­க­ளுக்­கான முன்­னோட்­டத் திட்­டம் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் தொடங்­க­வுள்­ளது.

தற்­போ­தைய கட்­டுப்­பா­டு­களுக்கு ஏற்ப, இரவு 10.30 மணிக்கு மேல் மது­பா­னத்தை விற்­கவோ அருந்­தவோ அனு­ம­திக்­கப்­ப­டாது. முன்­னோட்­டத் திட்­டத்­தில் பங்­கேற்­கும் வர்த்­த­கங்­கள், கொவிட்-19 விதி­களை மீறி­னால், அதற்­கான தண்­ட­னையை எதிர்­நோக்­கு­வ­து­டன் முன்­னோட்­டத் திட்­டத்­தி­லி­ருந்­தும் அகற்­றப்­ப­டு­வர் என்று கூறப்­பட்­டது.

முன்­னோட்­டத் திட்­டத்­தில் இடம்­பெ­றாத வர்த்­த­கங்­க­ளுக்கு நிதி ஆத­ர­வுத் தொகுப்­புத் திட்­டங்­கள் வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் அறி­விக்­கப்­பட்­டது.

இதன்­படி, உணவு பானத் துறை தொடர்­பான செயல்­பா­டு­களுக்கு அவர்­கள் மாறிக்­கொள்­ள­லாம். அல்­லது ஒரு குறிப்­பிட்ட தொகை­யு­டன் வர்த்­த­கத்தை மூட­லாம் என்று கூறப்­பட்­டது.