வெளிநாட்டு ஊழியர் மனநலப் பராமரிப்புக்கு புதிய பணிக்குழு

வெளிநாட்டு ஊழியர் மனநலப் பராமரிப்புக்கு புதிய பணிக்குழு

2 mins read
369bc5e1-c911-40dd-9467-a721aa372466
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் மன­நலப் பரா­ம­ரிப்­பில் ஆத­ரவை மேம்­ப­டுத்த புதிய பணிக்­கு­ழுவை மனி­த­வள அமைச்சு அமைத்­துள்­ளது. 'புரோஜெக்ட் டோன்' என்ற பணிக்­கு­ழு­வில் மனி­த­வள அமைச்சு, அர­சாங்க உள­வி­ய­லாளர்­கள், மன­ந­லக் கழ­கம் (ஐஎம்­எச்), வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யம் (எம்.டபிள்யூ.சி) 'ஹெல்த்­சேர்வ்' ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த பிர­தி­நி­தி­கள் இடம்­பெ­று­வர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டையே மன­ந­லம் பற்­றிய விழிப்­புணர்வை மேம்­ப­டுத்­த­வும் பரா­ம­ரிப்பு சேவை­களை அணு­கு­வ­தற்­கான சிறந்த வழி­மு­றை­களை ஏற்­ப­டுத்­த­வும் ஓர் ஆத­ர­வுக் கட்­ட­மைப்பை உரு­வாக்­கும் நோக்­கத்­தில் பணிக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை குறிப்­பிட்­டது.

அடுத்த ஈராண்­டு­களில், மூன்று கட்­டங்­க­ளாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட உள்ள ஏழு முனை உத்­தி­களை இந்­தக் கட்­ட­மைப்பு கொண்­டுள்­ளது. முதல் கட்­டத்­தில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தும் நல்ல மன­நல நடை­மு­றை­களை ஆத­ரிப்­ப­தும் இடம்­பெ­றும்.

இதில், வெளி­நாட்டு ஊழி­யர்­கள், அவர்­க­ளது கலா­சா­ரங்­களுக்கு பொருந்­திப் போகும் வழி­களில் மன­ந­லத்­தைப் பேண­வும் மன அழுத்­தத்­தைச் சமா­ளிக்­க­வும் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வார்­கள்.

அத்­து­டன் அடுத்த ஆண்­டில் இருந்து வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்­கான அறி­மு­கத் திட்­டத்­தில் மன­ந­லக் கல்­வி­யும் இடம்­பெ­றும்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மன­நல சேவை­க­ளைப் பெறு­வ­தற்­காக வச­தி­களை மேம்­ப­டுத்­து­வ­தும் அதற்­கேற்­ப பரா­ம­ரிப்­புக் கட்­டமைப்பை வலு­வாக்­கு­வ­தும் இரண்­டா­வது கட்­டம்.

இதன்­படி, மன­ந­லப் பிரச்­சினை ஏற்­ப­டக்­கூ­டிய அபாயத்­தி­லுள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­களை அடை­யா­ளம் கண்டு அவர்­க­ளுக்கு முன்­கூட்­டியே தகுந்த பரா­ம­ரிப்பை வழங்க, முன்களப் பணியாளர்கள், ஊழி­யர் தங்­கு­மிட நிர்­வா­கி­கள், முத­லா­ளி­கள், அரசு சாரா அமைப்பு­கள் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்­த­வர்­கள் தயார்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

மூன்­றா­வது கட்­டத்­தில், சமூக ஒருங்­கி­ணைப்­பும் ஆத­ர­வும் மேம்­படுத்­தப்­படும்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் மன­ந­லம் குறித்த புரி­த­லை­யும் மீள்­தி­ற­னை­யும் வலுப்­ப­டுத்­து­வ­துடன் அபா­யத்­தில் உள்ள ஊழி­யர்­கள் முன்­கூட்­டியே அடை­யா­ளம் காணப்­பட்டு, தகுந்த பரா­ம­ரிப்பு சேவை­க­ளைப் பெறு­வதை உறு­தி­செய்­வ­தில் தான் கடப்­பாடு கொண்­டி­ருப்­ப­தாக அமைச்சு கூறி­யது.