எஸ்டோனியா, நார்வே சென்று திரும்பியோருக்கு சிங்கப்பூரில் புது கட்டுப்பாடு

எஸ்டோனியா, நார்வே சென்று திரும்பியோருக்கு சிங்கப்பூரில் புது கட்டுப்பாடு

1 mins read
65feac5f-3310-4000-82c4-69de111e10d4
-

எஸ்­டோ­னியா, நார்வே நாடு­க­ளுக்­குக் கடந்த இரண்டு வாரங்­களில் சென்­றி­ருந்­த­வர்­கள், வீட்­டில் இருப்­ப­தற்­கான உத்­த­ர­வைக் குறிப்­பிட்ட சமூக வளா­கங்­களில் நிறை­வேற்ற வேண்­டும் என்று சுகா­தார அமைச்சு நேற்று அறி­வித்­தது. அடுத்த திங்­கட்­கி­ழமை முதல் இது நடப்­புக்கு வரு­வ­தாக அமைச்சு கூறி­யது.

இவ்­விரு நாடு­க­ளின் வரு­கை­யா­ளர்­கள், வீட்­டில் இருக்­கும் உத்­த­ர­வைத் தங்­க­ளுக்கு விருப்­ப­மான இருப்­பி­டத்­தில் இருந்­த­வாறு நிறை­வேற்ற அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தாக அக்­டோ­பர் 27ஆம் தேதி­யன்று அமைச்சு தெரி­வித்­தது. ஆனால் இரண்டு நாடு­க­ளி­லும் சமீப கால­மாக கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­மா­கப் பதி­வாகி வரு­வ­தைக் கருதி, அங்­கி­ருந்து வரு­ப­வர்­கள் குறிப்­பிட்ட சமூக வளா­கங்­களில் உத்­த­ரவை நிறை­வேற்ற முடிவு எடுக்­கப்­பட்­டது.

ஃபின்லாந்து, ஜப்­பான், தென்­கொ­ரியா, இலங்கை, தாய்­லாந்து, துருக்கி ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வரு­வோர் தொடர்ந்து விருப்­ப­மான இருப்­பி­டத்­தில் தங்­க­ளின் வீட்­டில் இருக்­கும் உத்­த­ரவை நிறை­வேற்­ற­லாம் என்று அமைச்சு கூறி­யது.