சாங்கி விமான நிலையம் 3வது முனைய பணியாளர்கள் 5,000 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை நிறைவு

சாங்கி விமான நிலையம் 3வது முனைய பணியாளர்கள் 5,000 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை நிறைவு

1 mins read
816235e6-8678-46fa-8312-ff555f684f63
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாங்கி விமான நிலையம் மூன்றாவது முனையத்தில் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 5,000க்கும் அதிகமான பணியாளர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என சுகாதார அமைச்சு நேற்று (நவம்பர் 6) தெரிவித்தது.

முனையம் 3ல் பயணிகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய பணியாளர்களுக்கு கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அக்டோபர் மாதம் 24ஆம் தேதி சுகாதார அமைச்சு அறிவித்தது.

அங்கு பணிபுரிந்த ஒரு பாதுகாவல் அதிகாரி, அங்குள்ள ராபிள்ஸ் மருத்துவமனையின் கொவிட்-19 பரிசோதனை உதவியாளர் ஆகியோருக்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த அறிவிப்பை அமைச்சு வெளியிட்டிருந்தது.

முனையம் 3ல் மொத்தம் 5,084 பணியாளர்களுக்கு இது வரை கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; யாருக்கும் தொற்று இல்லை.

எஞ்சியிருக்கும் 33 பேருக்கு தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை அவர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்வதன் தொடர்பில் சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து அமைச்சு செயல்படுகிறது.