குற்றவியல் நீதிமுறை மீதான பாட்டாளிக் கட்சியின் தீர்மானத்திற்கான திருத்தங்கள், நாடாளு மன்றத்தில் விவாதங்களை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்றத் தலைவி இந்திராணி ராஜா நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
எதிர்த்தரப்புடன் பொதுவான தளம் ஒன்றைத் தோற்றுவிப்பதும் இருதரப்பு ஆதரவைப் பெறுவதும் அந்த மாற்றங்களின் நோக்கம் என்றார் அவர்.
அந்த மாற்றங்கள் விவாதத்திற்கு வந்தது. அதன் பேரில் பேசும்படி உறுப்பினர்கள் அனை வருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது என்றாலும் எதிர்தரப்பினர் யாரும் பேசவில்லை என்று குமாரி இந்திராணி குறிப்பிட்டு இருக்கிறார்.

